“எங்க ஃபாஸ்ட் பவுலர்களுக்கு எதிரா பிளான் போட்டு வந்தாங்க.. முடிச்சு விட்டுட்டாங்க!” – பாபர் அசாம் விரக்தி பேச்சு!

0
8543

இந்திய அணி நேற்று ஆசியக்கோப்பையின் இரண்டாவது சுற்றில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிக பிரம்மாண்டமான வெற்றி பெற்றிருக்கிறது!

இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கை எடுத்துக்கொண்டால், துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் அரைசதம் அடித்தார்கள். இதன் மூலம் இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது.

- Advertisement -

இதற்கடுத்து விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் சிறப்பாக விளையாடி சதங்கள் பெற்றார்கள். இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே விட்டுக் கொடுத்தது.

இதற்கு அடுத்து பந்துவீச்சில் காயத்திலிருந்து திரும்பி வந்த ஜஸ்பிரித் பும்ரா மிரட்டினார். விக்கெட் கைப்பற்றாவிட்டாலும் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசினார். ஹர்திக் மற்றும் சர்துல் இருவரும் விக்கெட் பெற்றார்கள்.

இவர்களுக்கு அடுத்து பந்துவீச்சில் ஐந்தாவதாக களத்திற்கு வந்த சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், எட்டு ஓவர்கள் பந்து வீசி, 25 ரன்கள் தந்து, ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி, பாகிஸ்தான் அணியை ஒட்டுமொத்தமாக செயல்பட முடியாமல் முடக்கி விட்டார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு அடங்கிவிட்டது. இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது.

இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறித்தும், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு குறித்தும், இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் குறித்தும் அதிகப்படியான பேச்சுகள் இருந்தது. நேற்று எல்லாவற்றுக்கும் இந்தியா அணி முடிவு கட்டியிருக்கிறது. இந்திய அணிக்கு இந்த வெற்றி தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.

இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் “வானிலை என்பது எங்கள் கையில் கிடையாது. ஆனால் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டும் எங்கள் கைகளில்தான் இருந்தது. ஆனால் நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல முறையில் செயல்படவில்லை.

எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர்கள் திட்டங்கள் வைத்திருந்தார்கள். மேலும் அவர்கள் மிக நன்றாக துவங்கினார்கள். அதை விராட் மற்றும் ராகுல் மிகச் சிறப்பாக பின்பற்றி நல்ல ரன் கொண்டு வந்தார்கள். பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் முதல் பத்து ஓவர்களில் பந்தை இருபுறமும் மிக நன்றாக ஸ்விங் செய்தார்கள். ஆனால் அதை சிறப்பாக விளையாடும் அளவுக்கு எங்கள் பேட்டிங் இல்லை!” என்று கூறியிருக்கிறார்!