“அவங்க எதை நினைச்சாங்களோ அந்த இடத்தோட திரும்பிட்டாங்க!” – தென் ஆப்பிரிக்க அணி பற்றி ஸ்டெயின் பரபரப்பு பேச்சு!

0
735
Steyn

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக செயல்பட்ட பெரிய அணியில் ஒன்றாக தென் ஆப்பிரிக்க அணி இருந்தது.

உலகக் கோப்பைக்கு முன்பாக தென் ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு முன்னேறும் என்று யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக தென் ஆப்பிரிக்க தரப்பிலிருந்து அப்படியான எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் இல்லை என்பதுதான் உண்மை.

- Advertisement -

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா இந்த உலகக் கோப்பை தொடரை அதிரடியான வெற்றிகள் உடன் ஆரம்பித்தது. அவர்கள் சில உலகச் சாதனைகளை இந்த உலகக் கோப்பையில் படைத்தார்கள்.

அவர்கள் சென்று கொண்டிருக்கும் விதத்தில் வழக்கமாக அரையிறுதியில் தோற்பதை மாற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள் இல்லை உலக கோப்பையை கைப்பற்றுவார்கள் என்கின்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக உருவானது.

ஆனால் நேற்று மீண்டும் அறையறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோற்று வெளியேறியிருக்கிறார்கள். உலகக் கோப்பையில் 31 வருடங்களாக அவர்களுக்கு தொடர்கின்ற சோகம் நேற்று தொடர்ந்து வந்தது.

- Advertisement -

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க லெஜன்ட் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் கூறும்பொழுது “இந்தப் போட்டியில் யாராவது ஒருவர்தான் வெற்றி பெற முடியும். தோற்றவர்கள் தாங்கள் இந்த உலகக் கோப்பை தொடரை சரியாக விளையாடவில்லை என்று உணர்வார்கள். தென் ஆப்பிரிக்க அணியும் அப்படித்தான் உணரும். ஆனால் புள்ளி விபரங்களை எடுத்துப் பார்த்தால் அன்றைய தினம் மட்டுமே அவர்களுக்கு சரியாக அமையவில்லை.

மற்றபடி அவர்களின் முதல் ஆறு பேட்ஸ்மேன்களும் சதம் அடித்திருக்கிறார்கள். அவர்கள் முதலில் பேட்டிங் செய்யும்போதெல்லாம் அபார வெற்றி பெற்று இருக்கிறார்கள். அவர்கள் தற்போதைய உலக சாம்பியனை 300 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்கள். இதெல்லாம் ப்லுக்கில் நடக்காது.

அப்படியே தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை பாருங்கள். ஜெரால்டு கோட்சி 20 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேலும் ரபாடா தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியிருக்கிறார். ஆக மொத்தம் தென் ஆப்பிரிக்கா தாங்கள் விரும்பிய எல்லா பெட்டிகளையும் டிக் செய்து இருக்கிறது. அவர்கள் அரை இறுதியில் கோட்டை விட்டுவிடவில்லை. சேசிங்தான் அவர்களுடைய பிரச்சினையாக மாறியது.

அன்றிச் நோர்க்கியா இல்லாமல் தென் ஆப்பிரிக்கா அரை இறுதிக்கும் இறுதிப் போட்டிக்கும் முன்னேறும் என்று நான் நினைக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா அணியுமே நன்றாக தெரியவில்லை. ஆனால் உலகக்கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்கள் கடைசி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றார்கள். அவர்களுக்கு வேகம் கிடைத்தது. ஒட்டுமொத்தமாக இந்த உலகக் கோப்பை தொடரில் அவர்கள் எதிர்பார்த்த இடத்தில் வந்து முடித்திருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!