“அவங்க விருந்தாளிகள்.. அசிங்கமா நடந்துக்காதிங்க!” – பாகிஸ்தான் வீரர்களுக்காக களம் இறங்கிய கம்பீர்!

0
1518
Gambhir

இந்திய அணி நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிகப்பெரிய போட்டியில் விளையாடியது.

இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் தோற்காமல் எட்டாவது வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

உலகக் கோப்பைத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களால் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாட முடியாது, போட்டியை மாற்ற வேண்டும் என்று கேட்டு வந்தது.

ஆனால் ஐசிசி மற்றும் பிசிசிஐ மிக உறுதியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை மறுத்துவிட்டது. கட்டாயம் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாட வேண்டும் என்று கூறப்பட்டது.

அங்கு நிலைமைகள் மோசமாக இருக்கும் எனவே எங்களால் விளையாட முடியாது என்று மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டது. ஆனால் அதற்குப் பிறகு பாகிஸ்தான் முன்னாள் வீரர்களே அகமதாபாத் போய் விளையாடுங்கள் எதையும் சாக்காக சொல்ல வேண்டாம் என்றுகண்டிப்பாக சொன்னார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற பொழுது அகமதாபாத் மைதானத்தில் இந்திய ரசிகர்களில் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டது வீடியோக்களாகவே வெளிவந்திருக்கிறது.

முகமது ரிஸ்வான் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பும் பொழுது அந்தப் பக்கத்தில் இருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரைப் பார்த்து மதக்கோஷத்தை எழுப்பியது சமூக வலைதளங்களில் பரவலாகியது. இதற்கு இந்தியாவில் இருந்தே சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் கூறும் பொழுது “உங்கள் அணியை நீங்கள் தாராளமாக ஆதரிக்கலாம், ஆனால் வந்திருக்கும் அணியிடம் தவறாக நடந்து கொள்ளாதிர்கள். அவர்கள் உங்களுடைய விருந்தினர்கள். அவர்கள் விசிட்டர்களாக உலக கோப்பையை விளையாட இங்கு வந்திருக்கிறார்கள்!” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்!