“அந்த விஷயத்தை மிகைப்படுத்தி கூறி வருகிறார்கள் ” – கே.எல் ராகுல் அசத்தலான பேட்டி !

0
220

மார்ச் மாதம் 31ம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இதற்கான தயாரிப்புகளில் எல்லா அணிகளும் தற்போது இருந்தே ஈடுபட்டு வருகின்றன . ஐபிஎல் கலந்து கொள்ளும் அணிகளின் பயிற்சி முகாம்கள் தற்போது அந்தந்த அணிகளின் ஹோம் கிரவுண்டுகளில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் எல்லா ஐபிஎல் அணிகளின் ஹோம் கிரவுண்டுகளிலும் நடக்க இருப்பதால் ரசிகர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் ஆகி தங்களது முதல் தொடரிலேயே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் துரதிஷ்டவசமாக பிளே ஆப் சுற்று போட்டிகளில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த வருட ஐபிஎல் போட்டிகளுக்காக அந்த அணி சிறப்பாக தயாராகி வருவதாக அணியின் மெண்டார் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான டீம் ஜெர்சி வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர்கள், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா .அணியின் மென்டார் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் கே எல் ராகுல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் கேப்டன் கே.எல் ராகுல்.

அந்தப் பேட்டியின் போது பேசிய கே.எல்.ராகுல்” தனது ஆட்டத்தின் ஸ்ட்ரைக் ரேட் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் ஸ்ட்ரைக் ரேட் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. ஒரு பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக் ரேட் என்பது அணியின் சூழ்நிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மை நாம் எடுக்க வேண்டிய ரன்கள் எல்லாவற்றையும் பொருத்தே அமையும் என தெரிவித்தார். மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் நீங்கள் 140 ரன்கள் துரத்திச் செல்லும் போது 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட வேண்டிய அவசியம் இல்லை. எனவே ஸ்ட்ரைக் ரேட் என்பது நாம் அந்த நேரத்தில் இருக்கும் சூழ்நிலையை பொறுத்து அமையக்கூடிய ஒன்று என தெரிவித்தார்.

ஐபிஎல் தொடர்கள் மற்றும் சர்வதேச போட்டிகளிலும் கே.எல். ராகுலின் பேட்டிங் ஸ்டிரைக் ரேட் தொடர்பான சர்ச்சைகள் நீடித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டிகளின் போது கூட கேஎல் ராகுல் தூக்கத்தில் மெதுவாக ஆடியதாக அவர் மீது சர்ச்சைகள் இழந்தது. இதன் காரணமாக வர டி20 இந்தியாவிலிருந்தும் தற்போது நீக்கப்பட்டு இருக்கிறார். ஐபிஎல் போட்டி தொடர்களிலும் அவர் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வந்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் மீதான விமர்சனம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்தப் பேட்டியின் மூலம் அதற்கு பதில் அளித்து இருக்கிறார் கே எல் ராகுல்.

- Advertisement -

கேஎல் ராகுல் தொடர்ச்சியாக 5 ஐபிஎல் சீசன்களில் ஐநூறு ரண்களுக்கு மேல் குவித்திருக்கிறார். அவரது ஐபிஎல் கேரியர் ஸ்ட்ரைக் ரேட் 136.22.. இதைத்தான் அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருக்கிறார். அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப வேகமாகவும் நிதானமாகவும் கண்களை குவிக்க நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவரது பேட்டி சுட்டிக்காட்டுகிறது. கே எல் ராகுலின் டெஸ்ட் போட்டி ஃபார்ம் அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் கண்களை குவிக்க தவறிய கேஎல் ராகுல் மூன்றாவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் நாளை நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.