“இந்தியாவுக்கு பெரிய தலைவலி இவங்க ரெண்டு பேருதான்..!” – இந்திய அணி வெற்றி வாய்ப்பு குறித்து சவுரவ் கங்குலி கவலை!

0
4760
Ganguly

நாளை உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லக்னோ மைதானத்தில் இங்கிலாந்து அணியை சந்தித்து விளையாட இருக்கிறது.

இந்திய அணி ஏறக்குறைய அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. இங்கிலாந்து ஏறக்குறைய அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்டது. எனவே இரு அணிகளும் ஒரே மாதிரியான மனநிலையைத்தான் கொண்டிருக்கும்.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரில் யாரும் எதிர்பாராத விதமாக தென் ஆப்பிரிக்க அணி மிகச் சிறப்பான துவக்கத்தை பெற்று, தற்போது ஆறு போட்டிகளில் 5 போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

மேலும் ஆஸ்திரேலியா அணி நடப்பு உலகக் கோப்பை தொடரை இரண்டு தோல்விகளுடன் தொடங்கி, மீண்டும் தன்னுடைய வழக்கமான அதிரடி செயல்பாட்டுக்கு திரும்பி இருக்கிறது.

இன்று நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல்முறையாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு கொல்கத்தாவில் சவுரவ் கங்குலி வந்திருந்தார்.

- Advertisement -

அவர் நடப்பு உலகக் கோப்பை குறிக்கும் இந்திய அணி குறித்தும் சில கருத்துக்களை கூறியிருந்தார். அவர் கூறும் பொழுது “ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவும் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இங்கிலாந்து இப்படி விளையாடும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் இதுதான் கிரிக்கெட்.

இந்தியா வலுவான அணி தற்பொழுது நல்ல நிலையில் இருக்கிறது. ஆனால் சாம்பியன்ஷிப் என்பது இன்னும் தொலைவில் இருக்கிறது. இந்தியா முதலில் நாக் அவுட் சுற்றைத் தாண்ட வேண்டும்.

ஹர்திக் பாண்டியா மிகவும் முக்கியமான வீரர். ஆனால் தற்போது அவர் இல்லாவிட்டாலும் கூட இந்திய அணி வலிமையானதாகவே இருக்கிறது.

தற்பொழுது போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகின்ற காரணத்தினால், பங்களாதேசுக்கு அருகில் இருக்கின்ற காரணத்தினால், பங்களாதேஷ் ரசிகர்கள் நிறைய பேர் வந்திருக்கிறார்கள்!” என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்!

நாளை இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது!