“இவங்க ரெண்டு பேர் வேற லெவல்.. பேட்ஸ்மேன்கள் எப்பவும் கப் அடிக்க முடியாது!” – கம்பீர் அதிரடி ஸ்டேட்மென்ட்!

0
1220
Gambhir

தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று இருக்கும் பத்து அணிகளிலும் மிகச்சிறந்த பவுலிங் யூனிட் கொண்ட அணியாக இந்தியா இருந்து வருகிறது.

இந்திய அணியின் பவுலிங் யூனிட்டில் முகமது சமி, பும்ரா மற்றும் முகமது சிராஜ் என உலகத் தரமான மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அப்படியே டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் ஜோடியாகும்.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் சுழற் பந்துவீச்சு என்று எடுத்துக் கொண்டால் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் என உலகத்தரமான மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருமே டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ச்சியாக விளையாடக்கூடிய தரத்தில் இருப்பவர்கள்.

இவர்களின் இந்த தரத்தின் காரணமாக தற்பொழுது இந்திய அணியின் பவுலிங் யூனிட் மிகப்பெரிய அபாயகரமான ஒன்றாக உலகக்கோப்பை தொடரில் மாறி வருகிறது. எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு இவர்களின் பந்துவீச்சில் எந்த வித வசதியும் கிடைப்பதில்லை. நேற்று இங்கிலாந்துக்கு எதிராகவும் அப்படியான ஒரு தரத்தைதான் வெளிப்படுத்தினார்கள்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பேசும் பொழுது “பந்துவீச்சாளர்கள்தான் உங்களை தொடர்களை வெல்ல வைப்பார்கள். பேட்மேன்களால் இதைச் செய்ய முடியாது. இதைத்தான் நான் ரொம்ப நாட்களாக சொல்லி வருகிறேன். இதையேதான் இன்று நமது பந்துவீச்சாளர்கள் காட்டினார்கள்.

- Advertisement -

முகமது சமி பற்றி நாம் இன்னும் அதிகமாக பேசுவோம் என்று நம்புகிறேன். அவர் மீண்டும் விளையாடும் அணிக்குள் வந்ததிலிருந்து நமது பவுலிங் யூனிட் வித்தியாசமான ஒன்றாக மாறியிருக்கிறது.

நேற்று முகமது சமி பந்துவீச்சு நான் இதுவரை பார்த்ததில் சிறந்த வேகப் பந்துவீச்சாக இருக்கலாம். சேஸ் செய்யும் பொழுது பந்து வீசியது நம்ப முடியாததாக இருந்தது. ஒட்டுமொத்தமாக லைன், லென்த், ஸீம் பொசிஷன் என்று உலகத்தரமான பந்துவீச்சு.

230 ரன்களுக்கு பந்து வீசிய பொழுது சமியும் பும்ராவும் அவ்வளவு சிறப்பாக இருந்தார்கள். பும்ரா இந்த நேரத்தில் உலகில் தலைசிறந்த பந்துவீச்சாளர் என்று நமக்குத் தெரியும். இவர்கள் இரண்டு பேரும் இணைந்தால் நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!