ஐபிஎல் ஏலத்தில் 10 கோடிக்கும் குறையாமல் செல்ல காத்திருக்கும் வீரர்கள்!

0
1437

ஐபிஎல் ஏலத்தில் குறைந்தபட்சம் 10 கோடிக்கு மேல் செல்ல காத்திருக்கும் மூன்று முக்கிய வீரர்களின் பட்டியலை இங்கு காண்போம்.

கடந்த வருடம் ஐபிஎல்லில் சாம் கரன், பென் ஸ்டோக்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் சொந்தக்காரணங்களுக்காகவும் காயம் காரணமாகவும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் இந்த வருடம் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு கேன் வில்லன்சன், நிக்கோலஸ் பூரான் போன்ற வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றன.

இவர்கள் அனைவரும் இந்த வருடம் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் அணிகளின் கவனத்தில் இருக்கின்றனர்.

சாம் கரனுக்கு இந்த வருட உலகக் கோப்பை மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. 13 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இறுதிப் போட்டியிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். இதனால் இறுதி போட்டியில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

பென் ஸ்டோக்ஸ் பௌலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக பங்களிப்பை கொடுத்தார். உலகக்கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இவரும் இந்தியாவின் கண்டிஷனை நன்கு உணர்ந்தவர் என்பதால் பல கோடிகள் கொடுத்து எடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

அடுத்ததாக சரியான கேப்டன் இல்லாமல் தவித்து வரும் பஞ்சாப் அணி கேன் வில்லியம்சனை எடுப்பதற்கு முனைப்பு காட்டலாம். அதே போல் கடந்த வருடம் 14 கோடி கொடுத்து தக்கவைத்த ஹைதராபாத், வெளியே விட்டு இந்த வருடம் இன்னும் குறைவான பணத்திற்கு கேன் வில்லியம்சனை எடுக்க முயற்சிக்கும் என தெரிகிறது.

பென்ஸ் ஸ்டோக்ஸ், கேன் வில்லியம்சன் மற்றும் சாம் கர்ன் ஆகிய மூவரும் இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் பத்து கோடிகளுக்கும் குறையாமல் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களுடன் ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் இந்த வருடம் பலரின் கவனத்திலும் இருக்கிறார். ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்தபோது அவர் முதல்முறையாக துவக்க வீராக களம் இறக்கப்பட்டார். அது ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாக அமைந்திருந்தது. இரண்டு அரை சதங்களையும் அடித்தார். அதுவும் 200 ஸ்ட்ரைக் ரேட்டில்.

இந்திய மைதானங்கள் அவரது பேட்டிங் இருக்கு சாதகமாக இருப்பதாக தெரிகிறது ஆகையால் அவரும் இந்த வருட ஐபிஎல் இல் பத்து கோடிக்கு மேல் எடுக்கப்படலாம். ஏனெனில் பந்துவீச்சிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்