இறுதிப்போட்டிக்கு இந்த 2 அணிகள் தான் தகுதிபெறும்; அதில் கோப்பை இந்த அணிக்கு தான் – ஜாக்குவஸ் காலிஸ் கணிப்பு!

0
291

இந்த வருடம் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்த இரண்டு அணிகள் தகுதி பெறும் அதில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று தனது கணிப்பில் தெரிவித்து இருக்கிறார் ஜாக்குவஸ் காலிஸ்.

மார்ச் 31ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக துவங்க இருக்கிறது. இந்த 16வது சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த சீசனில் புதிதாக இடம்பிடித்த இரண்டு அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு சென்று, அதில் ஒரு அணி கோப்பையையும் வென்றது. ஆகையால் புதிதாக வந்திருக்கும் அணிகள் மீது பலருக்கும் கவனம் திரும்பி இருக்கிறது.

- Advertisement -

சென்னை, மும்பை போன்ற அணிகள் தங்களது சொந்த மைதானங்களில் விளையாடுவதால் இந்த வருடம் அவர்களுக்கு கோபையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது முதல் முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற முனைப்பில் ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகள் இருக்கின்றன என்பதால் இந்த வருடம் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் ஜாம்பவான்கள் பலர், யார் கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது? எந்த வீரர் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது? யார் அதிக ரன்களை குவிப்பார்? என்று பல்வேறு கணிப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் ஜாக்குவஸ் காலிஸ், எந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்? அதில் எந்த அணி கோப்பையை வெல்லும்? என்று தனது கணிப்பில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

- Advertisement -

“மும்பை அணி சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. ஆகையால் அந்த அணிக்கு இறுதிப்போட்டி வரை செல்ல வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறேன். டெல்லி அணியில் டேவிட் வார்னர் கேப்டனாக இருக்கிறார். அவருடன் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராகவும் இருக்கிறார். இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கும். இளம் பட்டாளங்கள் அணியில் இருக்கின்றனர். ஆகையால் இந்த அணியும் பலம் பொருந்தியதாக இருக்கிறது. இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கும் அனேக வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் முதல்முறையாக டெல்லி அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் செல்லும் என்றும் நான் எண்ணுகிறேன்.” என தனது கணிப்பை தெரிவித்தார்.