“இனி தவறாது.. இதைத்தான் செய்ய போறேன்.. டீம்ல சொல்லிட்டாங்க!” – சூரியகுமார் போட்டிக்கு முன் சிறப்பு பேட்டி!

0
1748
Surya

இந்திய அணி தற்பொழுது கே.எல்.ராகுல் தலைமையில் ஆஸ்திரேலியா அணியை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் எதிர்த்து இந்தியாவில் விளையாடி வருகிறது.

இந்தத் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று இந்தூர் மைதானத்தில் இரண்டாவது போட்டி தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியில் மார்ஸ் கம்மின்ஸ், ஸ்டாய்னிஸ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு ஹேசில்வுட், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் அணிக்குள் வந்திருக்கிறார்கள்.

இந்திய அணியின் தரப்பில் நட்சத்திர ஆட்டக்காரர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மட்டும் ஓய்வு கொடுக்கப்பட்டு, அவரது இடத்தில் பிரசித் கிருஷ்ணா விளையாடுகிறார். முகமது சிராஜ் இந்த போட்டியிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போட்டிக்கு முன்பாக பேசிய இந்திய அணியின் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் “நான் உள்ளே அமர்ந்திருந்த பொழுது அணிக்கு 125 ரன்கள் தேவை என்றால், எனது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று, நான் மனதிற்குள் காட்சியாக ஓட்டிப் பார்த்தேன். நான் கடந்த போட்டியில் செய்ததை ஐந்தாறு பயிற்சி செசன்களில் செய்தேன். நான் சுமார் 40 மற்றும் 50 பந்துகளுக்கு பேட் செய்து, நல்ல நம்பிக்கையை பெற்று ஸ்வீப் ஆடாமல் இருந்தால் என்ன நடக்கும் என்று பார்க்க விரும்பினேன்.

- Advertisement -

முதல் தர கிரிக்கெட்டில் நான் மும்பை அணிக்காக ரஞ்சி தொடரில் இந்த மாதிரி நிறைய முறை செய்திருக்கிறேன். நான் எல்லாவற்றையும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டேன். என்னால் மீண்டும் இதை எல்லாம் செய்ய முடியுமா? என்று யோசித்தேன்.

இந்த பார்மெட்டில் நான் என்ன தவறு செய்கிறேன்? என்பதை யோசித்தேன். அணிகள் வீரர்கள் என்று எல்லாம் எதிராக ஒரே மாதிரி இருக்கும் பொழுது, எங்கு தவறுகிறது என்று சிந்தனைக்குள் கொண்டு வந்தேன். டீம் மேனேஜ்மென்ட்டில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

அவர்கள் என்னிடம் நீங்கள் கொஞ்சம் நின்று நிதானமாக ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டும். பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று கூறினார்கள். நான் உண்மையில் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறேன். கடந்த ஐந்தாறு பயிற்சி அமர்வுகளில் என்ன செய்தேனோ அதையேதான் விளையாடும்போதும் செய்தேன். திட்டம் நன்றாக இருக்கிறது. இது அப்படியே தொடரும் என்று நம்புகிறேன்!” என்று கூறியுள்ளார்!