“அடுத்து ஜனவரி இந்தியாவுக்கு எதிராவும் அதிரடிதான்.. பாஸ்பாலை மாத்த மாட்டோம்!” – இங்கிலாந்து வீரர் போப் சவால் பேச்சு!

0
813
Pope

இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஜனவரி மாதம் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது.

இங்கிலாந்தின் இந்திய சுற்றுப்பயணத்தின் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது. இதற்கு அடுத்து கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 11ஆம் தேதி முடிவடைகிறது. இதற்கு அடுத்து ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும்.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கலம் இருவரும் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளராக வந்ததற்கு பிறகு, இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட் போல அணுகி வருகிறது. இவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் முறைக்கு உலகெங்கும் ரசிகர்கள் கிடைத்து வருகிறார்கள்.

பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் கொஞ்சம் சலிப்பை தரக்கூடியதாக இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடும் முறையில், டி20 கிரிக்கெட்டை விடசுவாரசியம் கூடுதலாக இருக்கிறது. காரணம் இங்கிலாந்து பந்து வீச்சிலும் அதிரடியான திட்டங்களை கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் அதிரடி திட்டத்தில் ஒரு பகுதியாக இருக்கும் பேட்ஸ்மேன் போப் இந்திய சுற்றுப்பயணம் பற்றி கூறும் பொழுது “நாங்கள் நிச்சயமாக ஆக்ரோஷமாக விளையாடுவதைத்தான் விருப்பமாக எடுத்துக் கொள்வோம். இது உங்கள் எதிர்பார்ப்பை நிர்வகிப்பது பற்றியது. நீங்கள் பொதுவாக சதம் அடிக்கவில்லை என்றால் தோல்வி அடைந்தவர்களாக பார்க்கப்படுவீர்கள்.

- Advertisement -

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு பேட்ஸ்மேன் எடுக்கும் 60 ரன் கூட வின்னிங் நாக்காக இருக்கும். அதேபோல் ஒரு அணி 200 ரன்கள் எடுப்பது கூட வெற்றிக்கு போதுமானதாக இருக்கும்.

எனக்கு ஒரு ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனாக இரண்டு பக்கத்திலும் எட்ஜ் எடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது உலகத்தின் சிறந்த ஸ்பின்னர். அதே சமயத்தில் ஜடேஜாவும், அக்சரும் பேட்டுக்கு வெளியே பந்தை நன்றாக திருப்புவார்கள். இந்தியா வெற்றி பெறுவதற்குக் கடினமான இடம். ஆனால் நாங்கள் முடிந்த அளவுக்கு வேகப்பந்து வீச்சையும் கொடுப்போம்.

ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கலம் உருவாக்கிய அணி சூழல் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனாக நீங்கள் உங்கள் இடத்திற்காக எப்பொழுதும் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். என்னால் முடிந்தவரை தயாராவேன். தேர்வு செய்யப்படுவது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை!” என்று கூறியிருக்கிறார்!