“மைதானத்தில் நல்ல கூட்டம் இருந்தது.. ஆனா ஒன்சைடா இருந்தது.. பரவால்ல..!” – கேன் வில்லியம்சன் தோல்விக்கு பின் பேட்டி!

0
3737
Williamson

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய அரையிறுதிப்போட்டியில் மிகவும் உணர்வுபூர்வமான ஒன்றாக ரசிகர்களுக்கு இருந்தது.

காரணம் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல அதிகபட்ச வாய்ப்பில் இருந்த இந்திய அணியை, 239 ரன்கள் மட்டும் எடுத்து, அரை இறுதியில் வைத்து தோற்கடித்து நியூசிலாந்து வெளியேற்றியது. அந்தத் தோல்வி இந்திய கிரிக்கெட்டை பின் காலங்களில் நிறையவே பாதித்திருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த முறையும் அப்படியான ஒன்று நடந்து விடக்கூடாது என்பது ரசிகர்களின் வேண்டுதலாக இருந்தது. ஆனால் நியூசிலாந்த அணி தனக்கென ஒரு திட்டம் வைத்து அதில் 100% சரியாக செயல்படும் அணி. எனவே ரசிகர்களுக்கு இந்திய அணி எவ்வளவு சிறப்பாக செயல்பட்ட போதும் உறுதியான நம்பிக்கை என்பது குறைவாகத்தான் இருந்தது.

இந்த நிலையில் இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 397 ரன்கள் குவித்த போதிலும், அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 43 ஓவர்கள் வரையிலும் வெற்றியை இந்திய அணியின் பக்கம் ஒருதலைப் பட்சமாக சாய விடாமல் பயமுறுத்தியது. இதற்கு அடுத்து வந்து பும்ரா குல்தீப் மற்றும் சமி மூவரும் விக்கெட்டுகளை கைப்பற்றவே ஆட்டம் இந்தியா பக்கம் வந்தது. இறுதியாக இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

தோல்விக்கு பின் பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேப்டன் வில்லியம்சன் கூறும்பொழுது “முதலில் இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். இது அவர்களின்சிறந்த ஆட்டமாக இருக்கலாம். நானூறு ரன்கள் என்பது இயல்பாகவே கடினமான ஒன்று. ஆனால் சிறப்பாக சண்டை செய்த எங்கள் அணி வீரர்களுக்கு பாராட்டுகள்.

- Advertisement -

ஆனாலும் தொடரை விட்டு வெளியே செல்வது ஏமாற்றம்தான். கடந்த ஏழு வாரங்களாக எங்கள் அணி செயல்பட்ட விதம் எனக்கு பெருமைக்குரிய ஒன்றாக இருக்கிறது. இந்தியா ஒரு டாப் கிளாஸ் அணி. அவர்கள் உலகத்தரமான பேட்ஸ்மேன்களை வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் உள்ளே வந்து 400 ரன்களை எடுத்தால் ஒரு பெட்டியை டிக் செய்து விடுகிறீர்கள். இந்தியா தற்போது இருக்கும் இடத்திற்கு மிகவும் தகுதியானவர்கள். சிறப்பாக விளையாடினார்கள்.

இங்கு ஒரு அற்புதமான கூட்டம் இருந்தது. நம்ப முடியாத சூழ்நிலை. ஆனால் கூட்டம் ஒருதலைப்பட்சமாக இந்தியாவுக்கு ஆதரவாக மட்டுமே இருந்தது. ஆனால் போட்டியில் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி. மேலும் இந்தியா நடத்துவது மேலும் மகிழ்ச்சி.

எங்களிடம் நம்ப முடியாத சில பங்களிப்புகள் இருந்தன. உண்மையாக நாங்கள் விளையாடும் கிரிக்கெட்டை அர்ப்பணிப்புடன் விளையாடினோம். ரச்சின் மற்றும் மிட்சல் இருவரும் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள்.

எங்கள் பந்துவீச்சாளர்களும் சிறப்பாகவே செயல்பட்டு வந்தார்கள். எதிரணிகளுடன் போட்டியில் நல்ல சண்டை செய்தார்கள். எங்கள் வழியில் செல்லாவிட்டாலும் கூட, இறுதியில் ஒரு குழுவாக முன்னேறிச் சென்றதிலும், சரியான திசையில் சில சரியான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!