“சுயநலம் மட்டும்தான் இருக்கு.. நாட்டுக்காக விளையாடுற ஆர்வமே தெரியல!” – இங்கிலாந்து அணியை விளாசி தள்ளிய கவுதம் கம்பீர்!

0
754
Gambhir

நேற்று உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளைத் தொடர்ந்து இலங்கை அணி இடமும் படுதோல்வியை இங்கிலாந்து அணி சந்தித்திருக்கிறது.

அவர்கள் தோல்வி அடைந்த எந்த ஒரு போட்டியிலும் எதிரணிக்கு நெருக்கடியை கொடுத்து ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்லவில்லை. தோற்ற அனைத்துப் போட்டிகளிலும் படுதோல்வியையே சந்தித்திருக்கிறார்கள்.

- Advertisement -

அவர்கள் என்ன அணுகுமுறையில் விளையாட விரும்புகிறார்கள் என்பது குறித்து கூட சரியான தெளிவு இல்லை. அவர்கள் வருகிறார்கள் அடுத்து அடிக்க பார்க்கிறார்கள் ஆட்டம் இழந்து விடுகிறார்கள்.

இங்கிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெறுவது என்பது இயலாத காரியமாகத்தான் இருக்கிறது. இதன் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணுகுமுறையின் மீது பெரிய விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறும் பொழுது ” இங்கிலாந்தின் உடல் மொழியை பார்த்தால் அவர்கள் முதலில் இருந்தே விளையாட ஆர்வம் அற்றவர்கள் போல இருந்தார்கள். உங்களால் எப்பொழுதும் ஒரே வழியில் பேட்டிங் செய்ய முடியாது. அவர்கள் ஒருவர் கூட ஆட்டத்தை எடுத்துச் செல்லும் மனநிலையில் இல்லை.

- Advertisement -

நிறைய வீரர்கள் இது இங்கிலாந்தின் ஸ்டைல் என்று கூறுகிறார்கள். நீங்கள் இங்கிலாந்தை விரும்புகிறீர்களா என்பது உங்களுடைய தனிப்பட்ட கருத்து. ஆனால் இதை ஆதரிக்கக் கூடியவர்களை நான் சுயநலவாதி என்பேன். விளையாட்டில் சுயநலத்திற்கு பங்கு கிடையாது. அவர்கள் எல்லோரும் நாட்டிற்கு விளையாடுவது போல் தெரியவில்லை தங்களின் நட்பை இருக்கு விளையாடுவது போல் இருக்கிறது.

முதல் ஏழு ஓவர்களுக்கு பிறகு இங்கிலாந்து 350 முதல் 370 ரன்கள் வரை எடுக்கும் என்று தோன்றியது. ஆனால் அதற்குப் பிறகு யாரும் ஆடுகளத்தில் நேரம் செலவிடவே இல்லை. ஜோ ரூட் ஆட்டம் இழந்ததற்கு பிறகு ஒவ்வொருவரும் மிகவும் மோசமான முறையில் விளையாடி ஆட்டம் இழந்தார்கள்.

இலங்கையின் பார்வையில் நல்ல விஷயம் என்னவென்றால், அவர்கள் தங்களுடைய சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டு விளையாடினார்கள். முன்னணி பந்துவீச்சாளர்களை கொண்டு விளையாடும் பொழுது, ஒரு முனையில் எப்பொழுதும் நல்ல பந்துவீச்சாளர்களை கேப்டனால் வைத்திருக்க முடியும் என்பது நல்ல விஷயம்!” என்று கூறி இருக்கிறார்!