” நியூசிலாந்து ஜெயிக்க ஒரே வழிதான் இருக்கு.. இது நடந்தா மட்டும்தான் உண்டு!” – சைமன் டால் வெளிப்படையான பேச்சு!

0
4108
Doull

இன்று மதியம் மும்பை வான்கடே மைதானத்தில் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன.

பொதுவான உலகக்கோப்பை வரலாறுகளின் படி நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் செயல்பாடு சிறந்ததாக இல்லை. நியூசிலாந்தின் கையே ஓங்கி இருந்திருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் நடப்பு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. இந்திய அணியின் இரண்டு யூனிட்டுக்களும் சரிசமமான பங்களிப்பை வெற்றிகளுக்கு வழங்கி வருகின்றன.

லீக் சுற்றில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணி அபாரமான முறையில் விளையாடி வெற்றி பெற்றது. ஆனாலும் இந்தத் தொடரில் இந்திய வெற்றிக்கு கொஞ்சம் பிரச்சனை தந்த ஆட்டமாக அது மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அரையிறுதி போட்டியில் மும்பை மைதானத்தில் நடைபெறுகின்ற காரணத்தினால், திறமைகளை தாண்டி சில அதிர்ஷ்டமும் தேவையாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டால் கூறும் பொழுது “நியூசிலாந்தின் பார்வையில் அவர்கள் முதலில் பேட்டிங் செய்ய வேண்டியது முக்கியமானது. பொதுவாகவே இங்கு டாஸ் வெல்வது இருதரப்புக்குமே தேவையான ஒன்று.

மும்பையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதை இதுவரை சிறந்த ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் எடுத்து, சிறப்பான முறையில் பந்து வீசினால் இந்தியாவை கட்டுப்படுத்த முடியும்.

கடந்த 12 வருடங்களில் உலகக் கோப்பையில் இந்திய நாக்அவுட் சுற்றில் எப்படியான வரலாறு கொண்டிருக்கிறது என்பது தெரியும். இதை எந்த இந்திய ரசிகரும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் ஃபேவரைட் ஆக உள்ளே செல்கிறார்கள். நியூசிலாந்து அணி இப்பொழுதுதான் இந்த உலகக் கோப்பைக்கு தங்களுடைய சிறந்த வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தால் மட்டுமே வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்!” என்று கூறியிருக்கிறார்!