முகமது ஷமியை தேர்வு செய்யாதது ஒன்றும் தவறு இல்லை – முன்னாள் இந்திய தேர்வுக்குழு தலைவர்!

0
113
Saba karim

இந்த வருட ஆசிய கோப்பை தொடருக்கு விராட் கோலியும் கே எல் ராகுலும் திரும்பி வருவது முக்கிய செய்தியாக இருந்தது. அதே சமயத்தில் இந்திய அணியின் டி20 பிரதான வேகப்பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா ஹர்சல் படேல் இருவரும் காயத்தால் நேஷனல் கிரிகெட் அகடமியின் கண்காணிப்பிற்கு வரவேண்டுமென்ற பிசிசிஐயின் அறிக்கை கவலைக்குரிய செய்தியாகும்.

இன்னொரு புறத்தில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பில் தற்போது நல்ல பௌலிங் பார்மில் இருக்கும் முகமது சமி சேர்க்கப்படாதது விவாதத்துக்கு உரிய ஒன்றாக இருக்கிறது. இந்த இடத்திற்கு இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஸ் கான் வந்திருக்கிறார். இவர் ஒரு ஒருநாள் போட்டியில் 54 ரன்களை தந்திருக்கிறார். அடுத்து இரு டி20 போட்டிகளில் 2.2 ஓவர்களில் முப்பத்தி ஒரு ரன்களுக்கு ஒரு விக்கெட், மூன்று ஓவர்களுக்கு நாற்பத்தி ஏழு ரன்கள் என விட்டு தந்து, தனது மூன்றாவது டி20 போட்டியில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என திரும்பி வந்தார்.

- Advertisement -

மூத்த அனுபவம் வாய்ந்த நல்ல பௌலிங் பார்மில் இருக்கும் முகமது சமிக்குப் பதிலாய் இவரைத் தேர்வு செய்திருப்பது குறித்து இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவர் சபா கரீம் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இதில் அவர் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஸ் கானுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

இதுபற்றி சபா கரீம் கூறும் பொழுது ” ஆவேஸ் கான் போன்ற இளைஞர்களிடம் நீங்கள் முதலீடு செய்த உடன் உடனே லாபத்தை எதிர்பார்க்க முடியாது. இவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. முகமது சமி நல்ல பார்மில் இருக்கிறார். பும்ரா இல்லாதபொழுது அவர் இந்திய அணிக்கு நல்ல தேர்வு என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் தேர்வாளர்கள் தொடர்ந்து இளம் வீரர்களோடு போக விரும்புகிறார்கள் என்பதையும் நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தான் உருவாக்கும் அணி கலாச்சாரம், வியூகங்கள் இவற்றை சரிவர உள்வாங்கி வெளிப்படுத்தும் வீரர்களோடு தொடர்ந்து போகப் விருப்பப் படுகிறார் என்று புரிகிறது. இதனால் அவருக்கேற்ற வீரர்களுக்கு அணியில் இடம் தரப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி ஆசிய கோப்பையோடு சேர்த்து 3 டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த மூன்று தொடர்களும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும். இந்தத் தொடர்களில் வீரர்கள் செயல்படுவதை பொருத்தே ஒரு முழுமையான அணி உருவாக்கப்படும் என்று தெரிகிறது!