“கோலி கிடையாது.. இங்கிலாந்து சீரிஸ் இந்த இந்திய வீரர்தான் ரன் குவிப்பார்” – ஜாகிர் கான் கணிப்பு

0
581
Zaheer

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே துவங்க இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியில் ஹாரி புரூக் மற்றும் இந்திய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் ரன் மெஷின் விராட் கோலி இருவரும் தொடரை விட்டு விலகி இருக்கிறார்கள். இதில் விராட் கோலி முதல் இரண்டு டெஸ்டுகள் மற்றும் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த தொடரை எதிர்பார்த்து ஆவலாக காத்திருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஒரு பெருத்த ஏமாற்றமாக இரண்டு தரப்பிலுமே அமைந்திருக்கிறது.

இந்திய தரப்பில் இருந்து விராட் கோலி வெளியேறி இருக்கின்ற காரணத்தினால் கேஎல் ராகுல் நான்காவது இடத்தில் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என்பது உறுதியாகிறது. ஆனால் அவர் இந்திய ஆடுகளங்களில் சுழற் பந்துவீச்சில் தடுமாற்றமாக கடந்த காலங்களில் இருந்து வந்ததாக புள்ளி விவரம் கூறுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் தரப்பில், எந்த வீரர் அதிகம் ரன்களை குவிப்பார்? சிறப்பாக விளையாடுவார் என்று, இந்திய முன்னாள் வீரர் ஜாகிர் கான் தன் கணிப்பைக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ஜாகிர் கான் கூறும் பொழுது “எதையும் முன் நின்று தானே செய்து காட்டுவதுதான் ரோகித் சர்மாவின் ஸ்பெஷல். மேலும் உலகக் கோப்பையில் எப்படி அவர் தனியாக நின்று விளையாடி காட்டினாரோ அதை இந்த முறையும் செய்வார். அவர் தன்னுடைய யோசனையிலிருந்து செயல்படுத்த கூடியவர்.

இதன் காரணமாக ஒட்டுமொத்த அணிக்கும் ஒரு செயல் திறன் கிடைக்கிறது. எனவே ரோஹித் சர்மா முற்றிலும் நிரூபிக்கப்பட்ட ஒரு சிறப்பான கேப்டன்.

ரோகித் சர்மா சென்னையில் வைத்து இங்கிலாந்துக்கு எதிராக சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஒரு மிகச் சிறப்பான டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி சதம் அடித்ததை நீங்கள் பார்த்தீர்கள். மேலும் இங்கிலாந்தில் வைத்தும் அவர்களுக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடினார். எனவே இந்த முறை அவர் இந்திய அணிக்காக சிறந்த பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்துவார்” என்று கூறி இருக்கிறார்.