விராட் கோலி கிடையாது.. இப்ப இவர்தான் நம்பர் 1 பேட்ஸ்மேன் – சமிந்தா வாஸ் உறுதியான பேச்சு!

0
1539
Vaas

இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வரும் ஐபிஎல் டி20 தொடர் போல இலங்கை கிரிக்கெட் வாரியம் கடந்த மூன்று ஆண்டுகளாக லங்கா பிரீமியர் லீக் என்ற பெயரில் டி20 தொடர் நடத்தி வருகிறது!

லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள மூன்று தொடர்களில் மூன்று முறையும் ஜாப்னா கிங்ஸ் அணி பட்டத்தை கைப்பற்றி அசத்தியிருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ், தம்புலா ஆரா, காலே டைட்டன்ஸ், ஜாப்னா கிங்ஸ், பி லவ் கண்டி என மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்த முறை கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார். இந்த அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் லெஜெண்ட் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் இருக்கிறார்.

இவரிடம் லங்கா பிரீமியர் லீக்கில் பாபர் ஆசம் இருப்பது குறித்தான கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ” பாகிஸ்தான் கேப்டன் பாபர் எங்கள் அணிக்கு பேட்டராக மட்டுமே விளையாட விரும்பினார். நிரோஷன் டிக்வெல்லா எங்கள் அணியின் கேப்டனாக இருப்பார். பாபர் ஆசமை எடுத்துக் கொண்டால் அவர் தற்போதைய கிரிக்கெட் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

- Advertisement -

மேலும் அவர் செயல்படும் விதம், அவர் அணிக்கு அளிக்கும் பங்களிப்பு ஆகியவை அற்புதமானது. எல்லா இளைஞர்களும் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். அவர் இந்த தொடரில் விளையாடுவதை பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். அவரைத் தவிர உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான நதிம் ஷா எங்கள் அணியில் இருக்கிறார். அவருடன் இணைந்து பதிரணா பந்து வீசப் போகிறார்.

பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக பாபர் சிறப்பாக செயல்படுகிறார் என்று எங்களுக்கு தெரியும். அவரிடம் குறைவான ஸ்ட்ரைக் ரேட் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் எங்களுடைய கொழும்பு அணிக்கு அவரிடம் இருந்து தேவையானது என்னவென்று தெரியும். எங்கள் அணி நிர்வாகத்தின் பயிற்சி குழு பாபர் ஆஸம் எதில் சிறந்தவர்? என்று அலசி, அவரிடமிருந்து சிறந்ததை பெற வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்!” என்று கூறி இருக்கிறார்!

இந்த பேட்டியில் சமிந்தா வாஸ் மிக உறுதியாகவே பாபர் ஆசம் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பது நம் எல்லோருக்கும் தெரியும் என்பதாகவே பேசி இருக்கிறார். ஆனால் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவரை விட விராட் கோலி முன்னணியில் இருக்கிறார். மேலும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித், ரூட் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!