“சச்சின் கோலி கிடையாது.. இந்தியா உருவாக்கியதில் இவரே சிறந்த பேட்ஸ்மேன்!” – பாக் ஜுனைட் கான் வித்தியாசமான கருத்து!

0
6166
Virat

கிரிக்கெட் உலகில் இந்தியா பேட்ஸ்மேன்களை உருவாக்குவதில் மிகச் சிறந்த நாடாக இருந்து வந்திருக்கிறது. பொதுவாக இந்திய கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களை சார்ந்ததாகவே இருந்திருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்தவர் என்று இந்தியாவில் இருந்து சுனில் கவாஸ்கர் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக வெளியில் வந்தார். இன்று வரையிலும் அவரை பேட்டிங் மாஸ்டர் என்று எல்லோரும் அழைக்கிறார்கள்.

- Advertisement -

கவாஸ்கர் காலத்திற்குப் பிறகு வந்த சச்சின் லிட்டில் மாஸ்டர் ஆனார். அவருடைய சாதனைகள் சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. அவருடைய காலத்தில் உலகக் கிரிக்கெட்டின் பேட்டிங் முகமாக சச்சின் இருந்தார். மேலும் இன்று வரையிலும் சிறந்த பேட்ஸ்மேன்களில் தலை சிறந்தவராக இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் சச்சின் காலத்திற்குப் பிறகு விராட் கோலி அவரைத் தாண்டிய உயரங்களை பேட்டிங்கில் தொட்டு வருகிறார். நடந்து முடிந்த உலகக்கோப்பையில் ஒருநாள் கிரிக்கெட்டில் முதன்முதலில் 50வது சதத்தை அடித்தவர் என்கின்ற அரிய சாதனையை படைத்தார்.

இப்படி இந்திய கிரிக்கெட்டில் இருந்து வந்த பேட்ஸ்மேன்கள் அவரவர் காலத்தில் உலக கிரிக்கெட்டில் பேட்டிங்கில் பெரிய ஆதிக்கத்தை செலுத்தியவர்கள். அவர்களுடைய பேட்டிங் தரமும் பேட்டிங் வெற்றியும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியா உருவாக்கியதில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜுனைட் கான் கூறும் பொழுது ” நான் ரோகித் சர்மாவைதான் சொல்வேன். அவரிடம் எல்லா வகையான ஷாட்களும் இருக்கிறது. விராட் கோலி சிறந்த வீரர். சச்சின் பேட்டிங் செய்த காலக்கட்டம் வேறானது. அவர் இப்போது இருந்திருந்தால் 100 சதங்கள் கூட அடித்திருப்பார்.

ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா 264 ரன்கள் அதிகபட்சமாக அடித்திருக்கிறார். மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மொத்தமாக மூன்று முறை 200 ரன்களுக்கு மேல் ஒரு நாள் கிரிக்கெட்டில் அடித்திருக்கிறார். இது சாதாரண விஷயம் கிடையாது. இது ஒரு அரிய சாதனை. மேலும் அவரை அதிக சிக்ஸர்கள் அடித்தவராகவும் இருக்கிறார்!” என்று கூறி இருக்கிறார்!