“ரோகித் கோலி கிடையாது.. இந்த 31 வயது இந்திய வீரர்தான் நெருக்கடி நாயகன்!” – இந்திய பேட்டிங் பயிற்சியாளர் பாராட்டு!

0
206
Rohit

நேற்று துவங்கிய இந்தியா தென் ஆப்பிரிக்கா பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 59 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து இருக்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி 38 ஸ்ரேயாஸ் ஐயர் 33 என 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்தார்கள்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் இந்திய அணி 90 ரன்களுக்கு மேல் மூன்று விக்கெட்டுகளை இழந்து இருந்தது. விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அணியை காப்பாற்றி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் மதிய உணவுக்கு சென்று திரும்பிய இந்த ஜோடி அடுத்தடுத்து ஆட்டம் இழந்து இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்கள். இந்திய அணி 107 ரன்களுக்கு முக்கியமான ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டது.

இந்தச் சூழ்நிலையில் முழுமையான பேட்மேன் ஆக கேஎல் ராகுல் மட்டுமே களத்தில் இருந்தார். அதற்கு அடுத்து அஸ்வின் சர்துல் தாக்கூர் என இரண்டு பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களும், மூன்று பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இவர்களை வைத்துக் கொண்டே கேஎல்.ராகுல் மேற்கொண்டு 101 ரன்கள் கொண்டு வந்தார். அவருடைய பேட்டிங்கில் எந்த இடத்திலும் சிறிய தடுமாற்றத்தைக் கூட பார்க்க முடியவில்லை. அவருடைய ஷாட் தேர்வுகள் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. மேலும் அதைச் செயல்படுத்திய விதம் அதைவிட நேர்த்தியாக இருந்தது.

நேற்றைய நாளில் கேஎல்.ராகுல் ஆட்டம் இழக்காமல் 105 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சித்தர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 70 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். இவருக்கு துணையாக சிராஜ் இருக்கிறார்.

நேற்றைய ஆட்டத்தில் கேஎல்.ராகுல் குறித்து பேசி உள்ள இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறும்பொழுது “ராகுல் நமக்கு நெருக்கடியான நேரத்தில் எல்லாம் காப்பாற்றும் மனிதராக உருவாகிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறை கடினமான சூழ்நிலை வரும் பொழுதும் அவர் அதை மிகச் சிறப்பாக கையாள்கிறார்.

மேலும் அவர் நேற்று தனித்த சிறப்போடு எதையும் செய்து விடவில்லை. சரியான பந்துகளைத் தடுத்தார். அடிக்க வேண்டிய பந்துகளை யோசிக்காமல் அடித்தார். இதுதான் அவருடைய வெற்றிக்கு காரணம்!” என்று பாராட்டி கூறியிருக்கிறார்!

இன்றைய நாளில் மேற்கொண்டு கேஎல்.ராகுல் சதம் அடிப்பார் என்றால் இந்திய அணிக்கு அது பெரிய நன்மையாக முடியும். இந்திய அணி 240 முதல் 250 ரன்கள் எடுக்கும் பொழுது, இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பில் நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது!