ரோகித் கில் விராட் கிடையாது.. இந்த ரெண்டு பேர்தான் உலக கோப்பையை முடிவு பண்ணுவாங்க – ஆஸ்திரேலியா லெஜன்ட் கணிப்பு!

0
1159
ICT

மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கைப்பற்றியது. ஏறக்குறைய 28 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மீண்டும் கிடைத்தது!

மகேந்திர சிங் தோனிக்கு கிடைத்த அணியை எடுத்துக் கொண்டால், துவக்கத்திலேயே வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் என அற்புதமான வீரர்கள் மேலே இருந்தனர். கீழே யுவராஜ் சிங், பந்துவீச்சில் அனுபவ ஜாகீர் கான் மற்றும் ஹர்பஜன் சிங் என ஒரு பெரிய பட்டாளம் இருந்தது.

- Advertisement -

இந்த அணியின் அனுபவமும் திறமையும் எந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்தும் மீண்டும் ஆட்டத்திற்குள் வரக்கூடிய அளவுக்கு இருந்தது. இந்த சிறந்த கலவையே அந்த உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கான அடிப்படை பலத்தை கொடுத்தது.

தற்போது எடுத்துக் கொண்டால் பேட்டிங் யூனிட்டில் ரோகித் சர்மா விராட் கோலி என பெரிய பெயர்கள் இருக்கிறது. பந்துவீச்சில் அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள். இந்த முறையும் அமைந்திருக்கும் அணி நல்லவிதமாகவே இருக்கிறது. இந்த அணிக்கு தேவை நம்பிக்கை மட்டும்தான்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி தற்போது உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இந்திய அணி பற்றி தன்னுடைய கருத்தை முன்வைத்து பேசி இருக்கிறார். இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு எந்த வீரர்கள் சிறப்பாக இருக்க வேண்டும்? என்பது குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“ஆமாம் இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்கான ஒரு அணியை வைத்திருக்கிறார்கள். இந்தியாவிற்கு உள்நாட்டில் தொடர் நடப்பதால் சாதகமான சூழ்நிலை இருக்கும். ஆனால் நான் இதில் முக்கியமான விஷயமாக உடல் தகுதியை கொண்டு வருகிறேன். இந்தத் தொடரில் பும்ரா மற்றும் சமி இருவரின் உடல் தகுதி முக்கியமானது.

இந்த தொடரில் இந்திய அணி பெரும்பாலும் உம்ராவின் சிறப்பான செயல்பாடு மற்றும் அவரது உடல் தகுதியை சார்ந்து இருக்கும். அவர் அணியின் வெற்றிக்கான மிக முக்கிய வீரராக இருப்பார். அவர் எடுத்தவுடன் போட்டியின் ஆரம்பத்தில் தாக்கத்தை உருவாக்க முடியும். மேலும் இன்னிங்ஸை அவரால் முடித்து வைக்கவும் முடியும்.

உங்களது பந்துவீச்சாளர்களை இந்த தொடர் முழுக்க நீங்கள் சரியாக வைத்திருப்பது மிக கடினமான ஒன்றாக இருக்கும். ஏனென்றால் இது நீண்ட உலகக்கோப்பைத் தொடர். நிச்சயம் இந்திய அணியில் நிறைய பன்முகத்தன்மை இருக்கிறது. அவர்கள் உலகக் கோப்பையை வெல்வது என்பது பந்துவீச்சாளர்களை எந்த அளவிற்கு பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்து இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!