தோனி யுவராஜ் இடம் பிரச்சனையே கிடையாது.. இவர் சரி பண்ணிட்டாரு- அஷ்வின் நம்பிக்கை!

0
807
Ashwin

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி மிக பலமாக இருந்த காலக்கட்டம் என்பது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் யுவராஜ் சிங் மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரும் களமிறங்கி வந்த காலக்கட்டம் என்று உறுதியாகச் சொல்லலாம்!

மேல் வரிசையில் இருந்து ரன்கள் வரும்பொழுது, இந்திய அணி மிக எளிதாக வெற்றி பெறும். பெரிய ரன்களை குவித்து, அணியின் பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய வசதியை ஏற்படுத்தி, பெரிய வெற்றிகளுக்கு இந்திய அணி செல்லும்.

- Advertisement -

அதே சமயத்தில் மேல் வரிசையில் இருந்து ரன்கள் வராவிட்டால், கீழ் வரிசையில் வரக்கூடிய யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா இந்த மூவர் கூட்டணி எப்படியும் போராடி கௌரவமான ரன்னுக்கு இந்திய அணியை அழைத்துச் சென்று விடும்.

இதில் கிடைக்கும் நல்ல மொமெண்டத்தை வைத்தும், மகேந்திர சிங் தோனியின் அபாரமான கேப்டன்சி மூளையாலும் இந்திய அணி வெற்றி பெற்று விடும். இந்திய அணியின் மொத்த பேட்டிங் வரிசையில் தோல்வி அடைவது வெகு எளிதில் நடக்காத ஒரு விஷயமாக இருந்து வந்தது.

இப்படியான நிலையில் யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி இருவரும் ஓய்வு பெற்ற பிறகு, இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பேட்டிங் கீழ் வரிசையில் மிகப்பெரிய ஓட்டை விழுந்தது. இதற்காக இந்திய அணி நிர்வாகம் பல முயற்சிகளை செய்து பார்த்தும் பலன் கிடையாது.

- Advertisement -

இப்படி நிலைமைகள் மோசமாக சென்று கொண்டிருந்த பொழுது, துவக்க வீரராக விளையாடி வந்த கே.எல்.ராகுலை இந்திய அணி நிர்வாகம் நான்காவது மற்றும் ஐந்தாவது வீரராக கொண்டு வந்து பரிசோதித்தது. பந்து தேய்ந்த பின்பு அவரது ஆட்டம் இந்த இடங்களில் மிகவும் சிறப்பாக பேட்டிங்கில் அமைந்தது.

தற்போது ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பையில் இந்திய அணியின் கீழ் வரிசை பேட்டிங்க்கு தலைமை ஏற்பவர் கே.எல்.ராகுலாகத்தான் இருக்கிறார். மேலும் அவர் விக்கெட் கீப்பிங் செய்ய கூடியவராக இருப்பதால், பிளேயிங் லெவலை உருவாக்குவதில் பிளக்ஸிபிலிட்டியை உருவாக்குகிறார்.

இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கே எல் ராகுல் பற்றி கூறும் பொழுது “தோனி மற்றும் யுவராஜ் சிங் இருவரும் ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அணி நிர்வாகம் அவர்களின் வெற்றிடத்திற்கான சரியான வீரர்களைத் தேடிக் கொண்டிருந்தது. கே.எல்.ராகுல் அந்த இடத்தை தன்னுடைய நிபுணத்துவத்தால் நிரப்பி இருக்கிறார் என்றே கூற வேண்டும். மேலும் அவர் எங்களுடைய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்!” ஆவார் என்று தெரிவித்திருக்கிறார்!