“இந்தியாவுக்கு பக்கத்துல பாகிஸ்தான் மட்டும் இல்ல யாரும் கிடையாது!” – வக்கார் யூனுஸ் தைரியமான பேட்டி!

0
9836
Waqar

நடக்க இருக்கின்ற உலகக் கோப்பை தொடரில் வழக்கம் போல இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு எதிர்பார்ப்பு மிக எக்கச்சக்கமாக இருக்கிறது!

உலகக் கோப்பை தொடருக்கான தேதிகள் முதலில் அறிவிக்கப்பட்ட பொழுது அக்டோபர் பதினைந்தாம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

பின்னர் குஜராத்தில் நவராத்திரி திருவிழா துவங்குகின்ற காரணத்தினால் அந்த குறிப்பிட்ட நாளில் பாதுகாப்பு தருவதில் சிக்கல் ஏற்படும் என்று, அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாகப் போட்டி மாற்றப்பட்டது.

மேலும் இந்திய அணி ஆசிய கோப்பையில் இந்த முறை பாகிஸ்தான அணியை 228 ரன்கள் என்கின்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி படுதோல்வியை கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக உலகக் கோப்பை இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தற்பொழுது இந்த போட்டி குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனுஸ் கூறும் பொழுது
“அந்தந்த இடங்களுக்கான பெட்டிகளை டிக் செய்வது பற்றி பேசினால் வேற எந்த அணியும் இந்தியாவிற்கு இணையாக இருக்க முடியாது. பாகிஸ்தானோ அல்லது வேறு எந்த அணியும் இந்தியாவிற்கு பொருத்தமானதாக இருக்காது. ஏனென்றால் இந்தியாவில் நல்ல ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர்களிடம் நல்ல பெஞ்ச் வலிமை இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது பாகிஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால், அவர்கள் இந்த முறை தவறவிடுகிறார்கள் என்று சொல்ல வேண்டும். நசீம் ஷா இல்லாதது பெரிய பின்னடைவு. அவர் புதிய பந்தில் ஷாகின் அப்ரிடி உடன் சேர்ந்து மிகப்பெரிய அச்சுறுத்தலை தரக்கூடியவர்.

நாங்கள் புதிய பந்தில் ஸ்ட்ரைக் செய்து வேகமாக விக்கெட்டை பெறும்பொழுது, விளையாட்டில் சிறந்த நிலையை பெறுவோம். அதற்கு எங்களுக்கு நல்ல வேகப்பந்து வீச்சு கூட்டணி வேண்டும். தற்பொழுது நசீம் ஷா இல்லாதது எங்களுக்கு இதில் மிகப்பெரிய பின்னடைவை கொடுத்து இருக்கிறது.

எப்பொழுதும் போல் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மிகப்பெரியதாக இருக்கும். மிகப்பெரிய ரசிகர்களின் மத்தியில் நீங்கள் இப்படி ஒரு போட்டியில் விளையாடும் பொழுது உங்கள் வசம் நீங்கள் இருக்க வேண்டும்.

இந்தியாவுடன் ஒப்பிடும் பொழுது பாகிஸ்தான் பலவீனமான அணிதான். இதனால் அவர்கள் அழுத்தத்தில் இருப்பார்கள். ஆனால் இந்திய அணிக்கும் அழுத்தம் இருக்கும். ஏனென்றால் கூட்டத்தால் அழுத்தம் இரு அணிகளுக்கும் சம நிலையில் இருக்கும். இருப்பினும் அணியின் செயல் திறனின் அடிப்படையில் மதிப்பிட்டால் இந்தியாதான் முன்னிலையில் இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!