“அந்த இடத்தில் சச்சின் என் பேரை சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது” – பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் பரபரப்பு பேச்சு!

0
8285
Sachin

கிரிக்கெட் உலகில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு எப்பொழுதும் ஒரு தனித்த இடம் எல்லா அணியினராலும் மற்றும் எல்லா அணியின் ரசிகர்களாலும் வழங்கப்பட்டு இருக்கிறது!

இது அவரின் தனிப்பட்ட கிரிக்கெட் திறமைக்காக மட்டும் வழங்கப்பட்ட இடம் கிடையாது. கிரிக்கெட் களத்தில் மட்டுமல்லாது வெளியிலும் அவர் காட்டிய ஒழுக்கம் பணிவு எல்லாவற்றுக்கும் சேர்த்துதான் இந்த இடம் வழங்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

சச்சின் எப்பொழுதும் மற்றொரு வீரரைத் தாக்கி பேசும்பழக்கம் கொண்டவர் கிடையாது. முடிந்த வரையில் மற்றவர்களிடத்தில் இருக்கும் திறமையை மட்டுமே வெளியில் பேசக்கூடியவராகத்தான் இதனால் வரை இருந்திருக்கிறார்.

இப்படி இந்த வகையில் சில காலத்திற்கு முன்பு இருந்து தன்னை தொந்தரவு செய்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் பெயரையும் அவர் சேர்த்து சொல்லி வந்தார்.

தற்பொழுது இது குறித்து அப்துல் ரசாக் கூறும்பொழுது ” முதலில் ஒரு விஷயம் சச்சின் உலகத்தரம் வாய்ந்த ஒரு பேட்ஸ்மேனாக இருந்தார். இனியும் அவர் அதே இடத்தில் இருப்பார். அவருக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்து மற்றும் திறமை மற்றும் வீரர்கள் பலம் இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அவரை தொந்தரவு செய்த ஒரு பந்துவீச்சாளராக என்னை அவர் சொல்லி இருக்க வேண்டிய தேவையே கிடையாது.

- Advertisement -

கிளன் மெக்ராத் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், ஆம்ப்ரோஸ், வால்ஸ், முரளிதரன் மற்றும் வார்னே போன்ற யாரையும் அவர் சொல்லி இருக்கலாம். இதனால்தான் சொல்கிறேன் அவர் என் பெயரை சொல்லி இருக்க வேண்டிய அவசியமே கிடையாது.

இதையெல்லாம் தாண்டி அவர் என்னுடைய பெயரைச் சொன்னது அவருடைய பெருந்தன்மை, சிறந்த பண்பு. அவர் மிகவும் அன்பானவராக இருந்தார். அவர் இதை ஒரு முறை அல்ல பலமுறை சொல்லி இருக்கிறார். சேவாக்கும் சொல்லி இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!

சச்சின் ஓய்வுபெற்ற சிலபல வருடங்கள் ஆகிவிட்ட பிறகும் அவருக்கு கிரிக்கெட் உலகில் இருக்கும் புகழும் மரியாதையும் இன்றும் அப்படியே தொடர்ந்து வருவது இந்த கிரிக்கெட் உலகில் இதுவரை எந்த வீரருக்கும் கிடைக்காத பேராகவே இருக்கிறது!