“கோலி கிடையாது.. இந்த இந்திய வீரருக்குத்தான் தொடர் நாயகன் விருது தரவேண்டும்!” – யுவராஜ் சிங் அதிரடியான கோரிக்கை!

0
4026
Virat

கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாற்றில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு ஒரு மிகச் சிறப்பான அணி இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது என்று தாராளமாக சொல்லலாம்.

இதுவரை உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியதில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய அணியை மிகச் சிறப்பான செயல்பாட்டை கொண்டு இருக்கிறது.

- Advertisement -

தற்போது விளையாடும் அணியில் இடம் பெற்றுள்ள 11 வீரர்களில் சூரியகுமார் யாதவ் தவிர்த்து மற்ற 10 வீரர்களும் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் மிக முக்கியமான இடங்களை படித்தவர்களாக இருக்கிறார்கள்.

மேலும் சூரிய குமாரையும் சேர்த்து 11 வீரர்களும் இந்திய அணிக்கு தனிப்பட்ட முறையில் ஆட்டத்தை வென்று கொடுக்கக்கூடிய திறன் படைத்த மேட்ச் வின்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே இந்த இந்திய அணிக்கு மிகப்பெரிய மதிப்பு கிடைத்திருக்கிறது. மேலும் இவர்களில் யார் இந்த உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெறுவது சரியாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறும் பொழுது ” இந்தியாவில் எப்பொழுதும் மேட்ச் வின்னர்கள் பெஞ்சில் இருக்கும் அளவுக்கு இருக்கிறது. ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தது இந்தியாவுக்கு நன்மையாக முடிந்தது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் சமி எப்படி விளையாடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். அவர் பெரிய மேடையில் வந்து செயல்பட்ட விதம் அபாரமானது. இந்த உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதுக்கு அவரே மிகவும் தகுதியானவர்.

இந்த முறை முதல்முறையாக ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் உலகக் கோப்பை பதக்கத்தை வெல்ல வாய்ப்புகள் மிக அதிகம். ஆசிய கோப்பைக்கு முன்பு இந்திய ஒருநாள் அணி எங்கே இருக்கிறது என்று நாம் தேடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது நம்மிடம் சரியான கலவை இல்லை. அதற்குப் பிறகு ஸ்ரேயாஸ் வந்தார். கேஎல் ராகுலும் பும்ராவும் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தினார்கள்.

ஏழு பேட்டர்கள் வேலையை செய்யாத பொழுது எட்டாவதாக ஒருவர் வந்து செய்து விடுவார் என்று நான் எப்பொழுதும் நம்புவது கிடையாது. இப்பொழுது இந்தியாவில் முறையான ஆறு பேட்ஸ்மேன்கள் மற்றும் ஐந்து பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். எங்களிடம் எட்டு முதல் பத்து மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். கிரிக்கெட் உலகில் கடந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி போல இந்த இந்திய அணி இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!