“கோலி ஷமி கிடையாது.. 2023 சிறந்த இந்திய வீரர் இவர்தான்” – கவாஸ்கர் அதிரடி கருத்து!

0
287
Virat

கடந்த ஆண்டாக மாறிப்போன 2023 ஆம் ஆண்டு இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு ஒரு பக்கத்தில் சிறந்த ஆண்டாகவும் இன்னொரு பக்கத்தில் அதற்கு எதிரான ஆண்டாகவும் அமைந்திருக்கிறது.

இந்திய அணியை பொறுத்தவரை இரு நாடுகளுக்கு இடையே ஆன தொடர்களை வெல்வதில் வழக்கம்போல் கடந்த ஆண்டும் மிகச் சிறப்பாக இருந்தது. உள்ளே வெளியே என்று குறிப்பிடத்தக்க வெற்றிகளை இந்திய அணி பெற்றது.

- Advertisement -

அதே சமயத்தில் ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் தோற்பது கடந்த வருடமும் வாடிக்கையாக தொடர்ந்தது. அதே சமயத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றுக்கோப்பையை இழந்தது.

ஒருபுறம் இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களை அபாரமாக வெல்வதும், ஐசிசி தொடர்களை வெல்ல முடியாமல் தோற்பதும் என ஒரு கலவையான ஆண்டாக இந்திய கிரிக்கெட்டுக்கு கடந்த ஆண்டு அமைந்திருக்கிறது.

கடந்த ஆண்டில் இந்திய அணிக்கு பேட்ஸ்மேன்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கில் மூவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். பந்துவீச்சில் சிராஜ், சமி இருவரும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். கவாஸ்கர் மற்றும் இர்பான் பதான் இருவரும் கடந்த ஆண்டு இந்தியாவிற்காக சிறப்பாக செயல்பட்ட வீரரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து கவாஸ்கர் கூறும் பொழுது “2023 சீசன் முழுவதும் அவர் பேட்டிங் செய்த விதத்திற்காக கில்லையே நான் பிரேக் அவுட் பெர்ஃபார்மர் என்று கருதுகிறேன். தொடக்கத்தில் அவர் தடுக்க முடியாதவராக இருந்தார். ஆனால் இறுதியில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவர் செயல்பாடு கொஞ்சம் கீழே இருக்கிறது. ஆனாலும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியை பொறுத்த வரை கடந்த ஆண்டு அவரே சிறந்த வீரராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து இர்பான் பதான் கூறும்பொழுது ” கடந்த ஆண்டு கில்தான். குறிப்பாக அவர் ஒருநாள் கிரிக்கெட் விளையாடிய விதத்திற்காக. அந்த இளம் வீரர் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக இருக்கலாம். மேலும் அவர் எதிர்காலத்தில் கேப்டன் ஆகவும் வரலாம். அவர் நிறைய சதங்கள் அடித்தார். அவருடைய ரன் ஆவரேஜ் சிறப்பாக இருக்கிறது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் வடிவம் அவருக்கு மிகச் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்!