“கோலி கிடையாது.. இந்திய டீம்ல நான் இவரோட ஃபேன்.. அவர டீம்ல பார்த்ததும்தான் நிம்மதி வந்துச்சு” – ஏபி.டிவில்லியர்ஸ் பேச்சு!

0
2242
Devilliers

கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர்களின் ஓய்வு அவ்வளவு விரும்பத்தக்க வகையில் அமையாது. கடைசியில் தங்களுடைய பார்ம் குறைந்தது, அவர்களுடைய ஓய்வு பற்றி வெளியில் பலர் பேசி, பிறகு ஓய்வு பெறுவதைத்தான் நாம் பொதுவாக பார்த்திருக்கிறோம்!

இந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் ஏபி.டிவில்லியர்ஸ் விதிவிலக்கானவர். உலகத்தின் எல்லா பந்து வீச்சாளர்களையும் பதற வைத்துக் கொண்டிருந்த நேரத்திலேயே, தனக்கு இதற்கு மேல் விளையாடுவதற்கான காரணங்கள் எதுவும் இல்லை, அப்படி விளையாடினால் அது நேர்மையற்றது என்று கூறி ஓய்வு பெற்றார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதோடு நிற்காமல், சொன்ன காரணத்தை 100% நியாயப்படுத்தி, ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியதோடு, ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற்றுக் கொண்டார். தற்பொழுது கோல்ப் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் வருகின்ற உலகக்கோப்பை குறித்து அவருக்கு எதிர்பார்ப்பு நிறைய இருக்கிறது. குறிப்பாக உலகக் கோப்பையில் விராட் கோலி எப்படி செயல்படுவார் என்கின்ற எதிர்பார்ப்பு அவருக்கு அதிகமாக இருக்கிறது. இதை அவர் நேற்று மிக வெளிப்படையாகவே சொல்லி இருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியில் தான் யாருடைய ரசிகன்? என்றும், இந்திய அணியில் திறமையிருந்தும் வாய்ப்பு கிடைக்காத வீரர் யார்? என்றும், வெளிப்படையாக மனம் திறந்து சில சுவாரசியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஏபி.டிவில்லியர்ஸ் கூறும் பொழுது ” உலகக் கோப்பை இந்திய அணியில் சூரியகுமார் பெயரை பார்த்ததும்தான் நான் நிம்மதி அடைந்தேன். நான் அவருடைய பெரிய ரசிகன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் டி20 கிரிக்கெட்டில் எப்படி விளையாடினேனோ அதேபோல் அவர் விளையாடுகிறார்.

அவர் இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டில் வேகம் எடுக்கவில்லை. ஆனால் இதில் அவர் செய்ய வேண்டியது ஒரு சிறிய மனமாற்றம்தான். அதைச் செய்வதற்கான அனைத்து திறன்களும் அவரிடம் இருக்கிறது. மேலும் இந்த உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆட்டம் இழக்காமல் சாம்சன் 92 ரன்கள் எங்களுக்கு எதிராக ஐபிஎல் தொடரில் எடுத்தார். அவர் எல்லா இடங்களுக்கும் பந்தை பறக்க விட்டார். அவரிடம் எல்லா வகையான ஷாட்களும் இருக்கிறது. அவரும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தன்னுடைய மனதை அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்!” என்று கூறி இருக்கிறார்!