“கோலி பாபர் கிடையாது.. நானும் இல்ல.. இவர்தான் உ.கோ-ல் அதிக ரன்கள் எடுப்பார்!” – ஜோ ரூட் வித்யாசமான கணிப்பு!

0
11332
Root

இந்தியாவில் அடுத்த மாதம் துவங்க இருக்க உலகக் கோப்பை நெருங்க நெருங்க, ரசிகர்களை தாண்டி வீரர்களுக்கும் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கிறது!

இந்த முறை இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கின்ற காரணத்தினால், ஆசிய துணை கண்டத்தைச் சேர்ந்த நாடுகளின் அணி வீரர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த வகையில் சில குறிப்பிட்ட முன்னாள் வீரர்கள் பங்களாதேஷ் அணியை எடுத்துக்காட்டி, அவர்கள் இந்த உலகக் கோப்பை தொடரில் யாரையும் வீழ்த்தக்கூடிய அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு அணியாக இருப்பார்கள் என்று கணித்திருக்கிறார்கள்.

மேலும் இந்தியாவில் நடக்க இருக்கும் உலக கோப்பையில் அதிக ரன்கள் அடிக்கக்கூடிய வீரர்களாக விராட் கோலி, பாபர் அசாம் இருக்கலாம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கணித்திருந்தார்கள்.

உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கின்ற காரணத்தினால் அதிக விக்கெட் கைப்பற்றக்கூடிய வீரர் சுழற் பந்துவீச்சாளராகவே இருப்பார், எனவே அவர் இந்தியாவின் பிரதான சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவாக இருப்பார் என்று பலரும் கணித்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் இந்த வகையில் தன்னுடைய வித்தியாசமான கணிப்பை வெளிப்படுத்தி, இரண்டு வீரர்களின் பெயரை முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“இந்த உலகக் கோப்பை தொடரில் ஜானி பேர்ஸ்டோ அதிக ரன்கள் எடுப்பார் என்று நான் கூறுகிறேன். அவர் எப்பொழுதும் தன்னை நிரூபிக்க கூடியவர். அணிக்கு தொடர்ச்சியாக மேல் வரிசையில் சீராக ரன்கள் எடுத்து வரக்கூடியவர். அவர் மிகச்சிறந்த வெள்ளைப் பந்து கிரிக்கெட் வீரர்.

பந்துவீச்சில் ஆதில் ரசீத் சிறப்பான திறன்களையும் பல்வேறு வகைகளையும் கொண்டிருக்கக் கூடியவர். அவர் மிடில் ஓவர்களில் எங்கள் அணிக்காக விக்கெட் கொண்டு வரும் திறமை பெற்றவர். இந்திய ஆடுகளங்களில் அவரை விளையாடுவது என்பது கடினம்!” என்று கூறியிருக்கிறார்!