“4 விக்கெட் எடுத்ததுல எந்த மகிழ்ச்சியும் கிடையாது.. என் நோக்கமே வேற!” – பும்ரா அதிரடி ஸ்டேட்மென்ட்!

0
2850
Bumrah

இந்திய அணி நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை இரண்டாவது போட்டியில் பதிவு செய்து இருக்கிறது.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் அணி, பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தை கொண்ட சிறிய மைதானமான டெல்லியில் 272 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 300 ரன்கள் எட்ட முடிகின்ற நிலைமையில் இருந்தது. ஆனால் கடைசிக் கட்டத்தில் நஜிபுல்லா ஜட்ரன், முகமது நபி மற்றும் ரசித் கான் ஆகிய முக்கிய மூன்று விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றியதால், அவர்கள் உருவாக்கிய அடித்தளத்தால் எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது.

நேற்று 10 ஓவர்கள் பந்துவீசிய பும்ரா 39 ரன்கள் விட்டுத் தந்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்கள் பந்து வீசிய அவர் 35 ரன்கள் மட்டுமே விட்டுத்தந்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

காயத்திற்கு பிறகு திரும்பி வந்த பும்ரா எப்படி செயல்படுவார் என்று எல்லோரும் கவலைப்பட்டு இருந்த நேரத்தில், அவர் அவுட் ஸ்விங் பந்துவீச்சை இன்னும் கூர்மைப்படுத்தி, முன்பை விட இன்னும் சிறப்பாக வந்திருக்கிறார்.

- Advertisement -

போட்டிக்குப் பின்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர் “நான் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினேன். ஆனால் நான் முடிவுகளை நோக்கி இருக்கக்கூடியவன் கிடையாது. இதனால் நான் அசாத்தியமான ஒரு காரியத்தை செய்தேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது.

நான் என் தயாரிப்போடு செல்கிறேன். நான் உணர்ந்ததை செயல் முறையில் கொண்டு வருகிறேன். நான் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை புரிந்து அதற்கு ஏற்றவாறு செயல்பட்டு விடைகளை கண்டுபிடித்து பார்க்கிறேன்.

இது மிகவும் எளிமையானது. நான் முடிவுகளைப் பற்றி யோசிப்பது இல்லை. ஏனென்றால் இன்று எனக்கு முடிவு கிடைத்திருக்கிறது. என்னுடைய வேலை புத்தகத்தில் இல்லாத ஒன்று. நான் என்னுடைய பலத்தை நம்புகிறேன். நான் ஆடுகளத்தை ரீட் செய்கிறேன். அதில் எனது சிறந்ததை கொண்டு வர முயற்சி செய்கிறேன்.

எல்லா அணியிலும் பேட்ஸ்மேனும் பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள். போலவே எங்கள் அணியிலும் இருக்கிறார்கள். நாங்கள் எந்த அணி மற்றும் எந்த வீரர்களுக்கு எதிராகவும் சிறப்பு திட்டங்கள் தயாரிக்கவில்லை. நாங்கள் எங்கள் அணி மற்றும் வீரர்கள் குறித்ததான் சிந்திக்கிறோம் தயார் செய்கிறோம்.

நாம் நமது அணியில் கவனம் செலுத்தினால், நாம் நமது பலத்தில் கவனம் செலுத்தினால், மீதி எல்லாவற்றையும் அதுவே தன்னைத்தானே கவனித்துக் கொள்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நமது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களை நாம் கட்டுப்படுத்தினால், அது நமக்கு சிறந்த வாய்ப்புகளை தருகிறது. எங்கள் குழு இதைத்தான் செய்கிறது!” என்று கூறியிருக்கிறார்!