கோலி பாபர் ரோகித் கிடையாது.. உலக கோப்பையில் இந்த வீரர்தான் அதிக ரன்கள் எடுப்பார் – ஜாக் காலிஸ் கணிப்பு!

0
5376
Kallis

இந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வருடமாக இருக்கிறது. 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் முதல் முறையாக முழுமையாக நடக்கிறது!

இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி அக்டோபர் ஐந்தாம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கிறது. இறுதிப் போட்டி இதே மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி நடக்கிறது!

- Advertisement -

இந்தத் தொடர் மொத்தம் பத்து அணிகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

மீதி இரண்டு இடங்களுக்கான அணிகளை கண்டறிய ஜிம்பாபேவில் உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றது. அதிர்ச்சி அளிக்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேற, இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றன.

தற்பொழுது இந்த உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் 10 அணிகளும் அதற்காக சிறந்த முறையில் தயாராவதற்கு மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலகக் கோப்பைக்கு முன்பாக எல்லா அணிகளும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகின்றன.

- Advertisement -

இந்த நிலையில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எந்த வீரர் அதிக ரன்கள் குவிப்பார் என்று, கிரிக்கெட் உலகில் என்றும் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மற்றும் அதிசிறந்த பேட்ஸ்மேன் ஜாக் காலிஸ் தனது கணிப்பைக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஜாக் காலிஸ் கூறும்பொழுது “இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் முன்னணி ரன் ஸ்கோர் ஆக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். வெளியில் இருந்து இங்கிலாந்து அணி உடன் இந்த சூழ்நிலையில் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் தனித்து தெரியும் ஒரு வீரராக இருப்பார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!

ஜாக் காலிஸ் இந்த கருத்து மிகவும் ஆச்சரியம் அளிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. ஜோஸ் பட்லர் நடு வரிசையில் கீழ் வரக்கூடியவர். மேலும் அவர் இந்திய சூழ்நிலைகளில் எப்படி செயல்படுவார்? என்று உறுதியாகக் கூற முடியாது. இதன் காரணமாக ஜாக் காலிஸ் இவரை தேர்ந்தெடுத்தது வியப்பாக இருக்கிறது!