“கோலி கிடையாது.. எங்களுக்கு இவர் மேலதான் பயம்.. அவர்கிட்ட கத்துகிறேன்!” – மார்னஸ் லபுசேன் அதிரடி பேட்டி!

0
15135
Labuschagne

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை திறமை எந்த அளவுக்கு ஒரு வீரருக்கு தேவையாக இருக்கிறதோ அதே அளவுக்கு அதிர்ஷ்டமும் தேவையாக இருக்க வேண்டும்.

தற்போதைய கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலி. ஆனால் அவருக்கு நடுவில் ஒரு இரண்டரை ஆண்டு காலங்கள் மிகவும் மோசமான ஒன்றாக அமைந்தது.

- Advertisement -

அந்த நேரத்தில் அவர் செய்து வந்த எல்லாமே பேட்டிங்கில் தவறாக போய் முடிந்தது. மீண்டும் திரும்பி வந்த அவர், திறமை இருந்தாலும் கிரிக்கெட்டில் அதிர்ஷ்டமும் மிக முக்கியமானது என்று கூறினார். நமக்கு ஏதாவது இன்னிங்ஸ்களில் கிடைக்கும் அதிர்ஷ்டம் மிகவும் முக்கியமானது.

ஆனால் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசேனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்பது, கிரிக்கெட் வீரர்களில் யாருக்கும் கிடைக்காத வித்தியாசமான அதிர்ஷ்டம். ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஆசஸ் தொடரில் ஸ்மித் ஹெல்மெட்டில் பந்து தாக்கியதால் வாய்ப்பு பெற்றார். அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் நிரந்தர நட்சத்திர வீரரானார்.

தற்பொழுது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேமரூன் கிரீனுக்கு பந்து ஹெல்மெட்டில் தாக்க, ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்தின் உலகக் கோப்பை திட்டத்தில் இல்லாத லபுசேனுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் அபாரமாக விளையாடி அணியை வெல்ல வைத்தார். அடுத்த போட்டியில் சதம் அடித்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து தற்போது அவருக்கு ஆஸ்திரேலியா உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்திருக்கிறது. மேலும் அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் பயிற்சி போட்டியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பைப் பெற்று வருகிறார். உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு உறுதி என்றே சொல்கிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அணி குறித்து பேசி உள்ள லபுசேன் ” இந்திய அணியில் ரோகித் சர்மா ரன்கள் எடுப்பதற்காக எந்த பெரிய ரிஸ்க்கும் எடுக்காமல், சாதாரணமான முறையில் விளையாடி பெரிய ரன்கள் அடிக்கிறார். அவர் ஒரு முறை ஆரம்பித்து விட்டால் அவரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

நான் நடந்து செல்லும் போது ரோகித் சர்மாவிடம் இதைத்தான் பேசினேன்.
‘ நீங்கள் என்ன செய்தாலும், அதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இந்த நிலைமைகளில் மிகவும் சிறப்பானவர்கள். நாங்கள் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறோம். இங்குள்ள சூழ்நிலைகளுக்கு நாங்கள் அன்னியர்கள். நாங்கள் எதிர் தரப்பிடம் இருந்து கற்றுக் கொள்கிறோம். ஒவ்வொரு முயற்சியிலும் ஒவ்வொன்றை கற்றுக்கொண்டு வளர்கிறோம்’ என்று சொன்னேன்!” என்று கூறியிருக்கிறார்!