“கில் கிடையாது இந்த சிஎஸ்கே வீரர்தான் இந்திய அணியின் எதிர்காலம்”- வாசிம் அக்ரம் உறுதி

0
12437
Akram

இந்த ஆண்டு ipl பதினாறாவது சீசனின் முடிவுக்குப் பிறகு இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கான எதிர்கால துவக்க வீரர்களுக்கான போட்டி பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது!

ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணியின் துவக்க வீரராக தற்பொழுது சுப்மன் கில் நிரந்தர இடத்தைப் பிடித்திருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் அவர் 17 ஆட்டங்களில் விளையாடி மூன்று சதங்களுடன் 890 ரன்களை 147 ஸ்ட்ரைக்ரேட்டில் அடித்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் துவக்க இடது கை ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி ஒரு சதத்துடன் 14 போட்டிகளில் 625 ரன்களை 164 ஸ்ட்ரைக்ரேட்டில் அடித்திருக்கிறார்.

தற்பொழுது டி20 கிரிக்கெட் இந்திய அணியில் கில் உடன் இணைந்து துவக்க வீரராக விளையாடி வரும் இஷான் கிஷான் 16 போட்டிகளில் 454 ரன்களை 142 ஸ்ட்ரைக்ரேட்டில் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த வருட ஐபிஎல் முடிவுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் துவக்க ஆட்டக்காரராக சில வாய்ப்புகள் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் ருதுராஜ், இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 16 ஆட்டங்களில் 590 ரன்களை 147 ஸ்ட்ரைக்ரேட்டில் அடித்திருக்கிறார்.

இப்படி இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு தற்பொழுதும் எதிர்காலத்திற்குமான துவக்க ஆட்டக்காரர்களுக்கான இடத்திற்கு பெரிய அளவில் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள பாகிஸ்தான அணியின் முன்னாள் பிரபல வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் ” சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் ருதுராஜ் அழுத்தத்தின் கீழ் மிக சிறப்பாக விளையாடினார். அவருடைய சிறப்பான உடல் தகுதி அவருக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கிறது.

மேலும் அவர் நல்ல ஃபீல்டராக இருக்கிறார். அவருக்கு நல்ல பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. இந்திய அணியிலும் மற்றும் ஐபிஎல் டி20 தொடர் அணியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான இடத்தைப் பிடிப்பார்” என்று கூறியிருக்கிறார்!