“கில் ரிஷப் பண்ட் கிடையாது.. எதிர்காலத்தில் இந்திய கேப்டனாக இந்த பையனே வருவார்!” – அம்பதி ராயுடு அதிரடி!

0
8774
Gill

இந்திய கிரிக்கெட் தற்போது வெகுவேகமாக மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. நான்கைந்து இளம் வீரர்கள் பேட்டிங் யூனிட்டுக்கு வந்திருக்கிறார்கள். மேலும் டி20 கிரிக்கெட்டில் இளம் பந்துவீச்சாளர்களும் வருகிறார்கள்.

தற்பொழுது இந்திய அணியை ரோகித் சர்மாவுக்கு பிறகு வழிநடத்துவதற்கு ஒரு பக்கத்தில் கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா என இருவர் தென்படுகிறார்கள்.

- Advertisement -

இதில் கேஎல்.ராகுல் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் வடிவத்தில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா உடல்தகுதி குறித்த கேள்விகள் இருப்பதால் அவர் ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணிக்கு கேப்டனாக வருவதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டவில்லை. மேலும் டி20 கிரிக்கெட் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா சிறிது காலம் கேப்டனாக இருக்கலாம்.

இவர்களுக்கு அடுத்து இளம் வீரர்களில் ரிஷப் பண்ட், சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கேப்டன் பதவிக்கான போட்டியில் இருக்கிறார்கள். இவர்கள் மூவருமே தற்போது ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பை வகிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய முன்னாள் வீரர் அம்பதி ராயுடு கூறும் பொழுது “இப்போது இந்திய கிரிக்கெட்டில் மிகவும் குறைவாக பயன்படுத்தக்கூடிய திறமையான வீரர் ருத்ராஜ்தான். அவருக்கு அபார திறமை இருப்பதாக நான் நினைக்கிறேன். அவரை அதிகம் இந்திய கிரிக்கெட் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மூன்று வடிவங்களிலும் அவருக்கு விளையாட வாய்ப்பு தர வேண்டும்.

- Advertisement -

அவருடைய சிறப்பான விஷயம் என்னவென்றால் திறமைதான். அவர் பந்தை டைமிங் செய்வது, அவருடைய ஷாட்கள், அவருடைய மன உறுதி எல்லாமே மகத்துவமானது. அவர் உலகத் தரமான கிரிக்கெட்டராக வருவார். அவர் மிக மிக அமைதியானவர். ஆனால் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். தோனிக்கும் அவருக்கும் இந்த விஷயத்தில் ஒற்றுமை இருக்கிறது. ஆட்டத்தை மிக நன்றாக ரீட் செய்வார். இந்திய கிரிக்கெட்டின் சொத்தாக அவர் இருப்பார் என்று நினைக்கிறேன்.

தோனி பாய்க்கு பிறகு அவர் சிஎஸ்கே அணியை வழிநடத்த ஆரம்பிப்பார் என்று உணர்கிறேன். பின்னர் அவர் இந்திய அணியையும் வழி நடத்தலாம். ஏனென்றால் அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!