“தோனி கிடையாது.. இவர்தான் என் குரு.. இவர் மாதிரிதான் விளையாடறேன்!” – ரிங்கு சிங் பரபரப்பு பேச்சு!

0
42706
Rinku

இந்திய கிரிக்கெட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக சில இளம் பேட்ஸ்மேன்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இதில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரிங்கு சிங் மிகவும் முக்கியமானவராக இருக்கிறார்!

மிகவும் வறுமையான குடும்ப பின்னணியில் இருந்து, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆரம்பகட்டத்தில் தேர்வாகி, ஆனால் விளையாடும் வாய்ப்பை பெற முடியாமல் இருந்து வந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு லக்னோ அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோற்றப்போட்டியில், இவரது போராட்டம் அனைவரது கவனத்தையும் கொஞ்சம் ஈர்த்தது. ஆனால் அதற்குப் பிறகு பெரிதாக இவர் குறித்த எந்த பேச்சும் கிடையாது.

இந்த நிலையில்தான் இந்த வருடம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்கள் அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார். ஒரே போட்டியின் மூலமாக ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமாக மாறினார். இது அவரை நேராக இந்திய அணிக்கும் கொண்டு வந்து சேர்த்தது.

இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பு பெற்ற ரிங்கு சிங் மூன்று தொடர்களில், ஆறு ஆட்டங்களில் இதுவரை மூன்று முக்கியமான பினிஷிங் இன்னிங்ஸ்கள் விளையாடி அசத்தியிருக்கிறார். இதன் காரணமாக இவர் மீதான மதிப்பு வெகுவாக அதிகரித்து இருக்கிறது.

- Advertisement -

இன்று பேசி உள்ள ரிங்கு சிங் கூறும் பொழுது “நான் சுரேஷ் ரெய்னா பையாவின் பெரிய ரசிகன். நான் அவரை பாலோ செய்து அவரையே காப்பி செய்ய முயற்சி செய்கிறேன். அவர் எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றும் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையிலும் பெரிய பங்கு வகித்துள்ளார்.

நான் கிரிக்கெட் விளையாடும் பொழுது ஆரம்ப கட்டத்தில் எனக்கு தேவையான எல்லா கிரிக்கெட் உபகரணங்களையும் அவர் வழங்கி இருக்கிறார். நான் எதுவும் கேட்காத பொழுது கூட எனக்கு தேவையான அத்தனையும் அவரிடம் இருந்து வந்திருக்கிறது. எனக்கு சந்தேகம் ஏற்படும்பொழுது எல்லாம் அவரை நான் அழைப்பேன். அவர் என்னுடைய பெரிய சகோதரர் போன்றவர்.

அவர் எனக்கு போட்டியில் எப்படி அழுத்தத்தை கையாள்வது என்று கற்றுக் கொடுத்தார். முதல் நான்கு ஐந்து பந்துகள் விளையாடி பின்பு எப்படி டாப் கியர்க்கு நம்மை மாற்றிக் கொள்வது என்று கற்றுக் கொடுத்தார். இன்று ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்கு விளையாடும் பொழுது அவர் சொல்லிக் கொடுத்த விஷயங்கள் மிகவும் உதவியாக இருந்து வருகிறது!” என்று கூறியிருக்கிறார்!