தோனி பூரன் கிடையாது; இந்த ஐபிஎல் தொடரில் இவர்தான் பெஸ்ட் பினிஷர் – கெவின் பீட்டர்சன் தேர்ந்தெடுப்பு!

0
1246
Pitersen

பதினாறாவது ஐபிஎல் சீசனின் லீக் சுற்றுப்போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கின்றன!

ஐபிஎல் தொடரில் லீக் சுற்று கடைசி இரண்டு போட்டிகளில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாட இருக்கின்றன.

- Advertisement -

லீக் போட்டிகளில் முடிவில் இந்த ஐபிஎல் தொடரில் உலகின் தலைசிறந்த பினிஷர் ஆன மகேந்திர சிங் தோனி முட்டி வலியின் காரணமாக கடைசி சில பந்துகளை மட்டுமே சந்தித்து விளையாடி வருகிறார். அவர் 14 போட்டிகளில் 103 ரன்களை 190 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். இதில் பத்து சிக்ஸர்கள் அடக்கம்.

இந்த முறை லக்னோ அணிக்கு பினிஷர் ஆகவும் அவதாரம் எடுத்திருக்கும் நிக்கோலஸ் பூரன் 14 போட்டிகளில் 358 ரன்களை 173 ஸ்ட்ரைக்ரேட்டில் அடித்து இருக்கிறார். இதில் 26 சிக்ஸர்கள் அடக்கம்.

ஐபிஎல் தொடரில் நீண்ட வருடங்களாக கொல்கத்தா அணிக்கு பினிஷர் ஆக ரசல் வெற்றிகரமாக விளங்கி வந்தார். ஆனால் இந்த ஆண்டு அவர் 14 போட்டிகளில் 227 ரன்களை 145 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே அடித்திருக்கிறார். மொத்தமாக அவரிடம் இருந்து 13 பவுண்டரி மற்றும் 18 சிக்ஸர்கள் மட்டுமே வந்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் பெஸ்ட் பினிஷர் யார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வீரருமான கெவின் பீட்டர்சன், கொல்கத்தா அணியின் புதிய பினிஷர் ஆக உருவாக்கி இருக்கும் இந்திய இளம் வீரர் ரிங்கு சிங்கை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

ரிங்கு சிங் இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 474 ரன்கள் குவித்திருக்கிறார். ரன் சராசரி 60. ஸ்ட்ரைக்ரேட் 150. அதிகபட்ச ஸ்கோர் 67*. இதில் நான்கு அரைசதங்கள், 31 பவுண்டரி மற்றும் 28 சிக்ஸர்கள் அடக்கம். இந்திய அணியில் இவருக்கு இடம் அளித்தே ஆக வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.