இந்திய கிரிக்கெட்டில் சில வீரர்களின் காம்பினேஷன் எப்பொழுதும் மறக்க முடியாத மற்றும் அதிக வெற்றிகளை கொடுத்த ஒன்றாக இருக்கும். இந்த வகையில் ஆரம்ப காலகட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி காம்பினேஷன் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.
இதற்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனி உள்ளே வந்து தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பிறகு, அவருக்கும் யுவராஜ் சிங்குக்கும் இடையில் வந்த பார்ட்னர்ஷிப்புகள் மிகவும் அசத்தலானவை. பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அவர்கள் தொடர்ச்சியாக அமைத்த பாட்னர்ஷிப்புகள் இன்றுவரை ரசிகர்களிடம் பிரபல்யம்!
இதற்குப் பிறகு மகேந்திர சிங் தோனி தன்னை பேட்டிங்கில் மிகவும் கீழே இறக்கி பினிஷர் ஆக வைத்துக் கொண்டு பிறகு, சுரேஷ் ரெய்னா அவருடன் இணைந்து விளையாடுவதற்கான அதிக வாய்ப்புகளை பெற்றார்.
கடைசிக் கட்டத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து எப்படியாவது ஆட்டத்தை வென்று கொடுத்து விடுவார்கள் என்கின்ற நம்பிக்கை இப்பொழுது கூட இந்திய ரசிகர்களிடம் உண்டு. இவர்களிடமும் மறக்க முடியாத பார்ட்னர்ஷிப்புகள் இந்திய அணிக்கு வந்திருக்கின்றன.
மேலும் களத்தில் சுரேஷ் ரெய்னா மற்றும் மகேந்திர சிங் தோனி இடையிலான பீல்டிங் புரிதல் அபாரமானதாக இருக்கும். ஆட்டத்தையே மாற்றக்கூடிய ரன் அவுட் மற்றும் கேட்ச்கள் நிறைய வந்திருக்கின்றன.
மகேந்திர சிங் தோனி தலைமையில் சுரேஷ் ரெய்னா 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது, மேலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலம் இருவரும் சேர்ந்து விளையாடியது, இருவரும் ஒரே நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது என, இவர்களிடையே பிணைப்பும் பந்தமும் மிக இறுக்கமான ஒன்றாக இருந்தது.
இந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? தன்மகன் இந்திய கிரிக்கெட்டில் யாருக்கு தீவிர விசிறியாக இருந்து வருகிறார் என்பது குறித்து சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இப்போது நான் என்னுடைய மகனுக்கு பயிற்சியாளராக மாறிவிட்டேன். பொதுவாக அவர்தான் எனக்கு பயிற்சியாளராக இருந்தார். இப்பொழுது நான் அவருடைய பேட்டிங் கிரிப்பை மாற்ற வேண்டும். அவருக்கு விளையாட்டில் ஆர்வம் மிக அதிகம்.
இதையும் படிங்க : ரஜத் பட்டிதாருக்கு மீண்டும் அதிர்ஷ்டமா?.. கே.எல்.ராகுல் நிலைமை என்ன?.. பிசிசிஐ தரப்பில் வெளியான தகவல்
ஆனாலும் கூட அவர் கிரிக்கெட்டை முதலில் ரசிக்க வேண்டும். எனவே அவர் கிரிக்கெட் பார்க்க வருகிறார். மேலும் அவர் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகர். விராட் கோலியை என் மகன் நேரில் சந்தித்து இருக்கிறார்” எனக் கூறியிருக்கிறார்.