சேசிங்கில் தான் தோனி மாதிரி கிடையாது; அது தனக்கு பிடிக்காது என்று வெளிப்படையாக பேசிய ஹர்திக் பாண்டியா!

0
7156
Hardikpandya

கடந்த ஐபிஎல் சீசனின் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது நான்காவது போட்டியில் இன்று பஞ்சாப் மொஹாலி, மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று, இந்தத் தொடரில் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது!

பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்து பஞ்சாப் அணியை 20 ஓவர்களில் 153 ரன்களுக்கு அபாரமாக கட்டுப்படுத்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி!

- Advertisement -

அடுத்து பேட்டிங் செய்ய வந்து நான்கு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. ஆனால் எளிமையாக பெற்று இருக்க வேண்டிய வெற்றியை கடைசி ஓவரின் முன் பந்துக்கு வரை கொண்டு சென்று, அதுவும் நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பவுண்டரி அடித்து கஷ்டப்பட்டு குஜராத் அணி வென்றது.

மத்திய ஓவர்களில் யாராவது கொஞ்சம் தைரியமாக ரன்களுக்கு போயிருந்தால், அப்படி போன ஒரே ஓவரில் ஆட்டம் முழுமையாக குஜராத் வசம் வந்திருக்கும். அப்படித்தான் தேவைப்பட்ட ரன் ரேட் இந்த ஆட்டத்தில் குஜராத் அணிக்கு இருந்தது.

வெற்றிக்குப் பிறகு ஆட்டம் குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா “நான் நேர்மையாக சொல்வது என்றால், நாங்கள் இருந்த நிலைக்கு இந்த ஆட்டத்தை முடித்த விதத்திற்கு நான் பாராட்ட மாட்டேன். இந்த ஆட்டத்தில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் விளையாட்டின் அழகு, அதாவது ஆட்டம் முழுமையாக முடிவடைந்தால் தான் முடிவடைந்தது என்று அர்த்தம். நாங்கள் இதுகுறித்து டிராயிங் போர்டுக்கு செல்வோம். நாங்கள் மிடில் ஓவர்களில் ஒன்று இரண்டு ரிஸ்க் எடுத்து இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இந்த ஆடுகளம் மண்ணின் காரணமாக கொஞ்சம் கடினமாக இருந்தது. பந்து எல்லா நிலையிலும் காய்ந்தே இருந்தது. இது எனக்கு ஆச்சரியமாக இல்லை. பந்துவீச்சில் அல்ஜாரி ஜோசப் மற்றும் மோகித் சர்மா இருவரும் சிறப்பாக செயல்பட்டார்கள். மோகித் சர்மாவுக்கு பாராட்டுகளை தெரிவித்தாக வேண்டும். அவர் நெட் பௌலராக அணிக்கு வந்து அவரது சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து, தற்பொழுது வாய்ப்பை பெற்று சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இது விழுங்குவதற்கு மிகவும் கடினமான ஒரு மாத்திரை. சேசிங்கில் ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு செல்வது எனக்கு பிடிக்காது!” என்று தெரிவித்திருக்கிறார்!

கேப்டன்சியில் மகேந்திர சிங் தோனியின் வழியைப் பின்பற்றும் ஹர்திக் பாண்டியா, சேசிங்கில் மகேந்திர சிங் தோனி ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு செல்வதை போல கொண்டு செல்வது தனக்கு சரி வராது என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!