“பும்ரா கிடையாது.. உலக கோப்பையில் இந்த 4 பவுலர்கள்தான் டாப்ல இருப்பாங்க!” – பாப் டு பிளிசிஸ் வெளிப்படையான கருத்து!

0
442
Bumrah

இந்தியாவில் நடக்க இருக்கும் 13ஆவது உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

நாளை ஓய்வு நாளாக அமைந்து, நாளை மறுநாள் அக்டோபர் ஐந்தாம் தேதி, நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் கடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வி கண்ட நியூசிலாந்து, இரண்டு அணிகளும் முதல் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன!

- Advertisement -

உலகக்கோப்பை மிக நெருக்கத்தில் இருக்கின்ற காரணத்தினால் ரசிகர்கள், முன்னாள் இந்நாள் வீரர்கள் என அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் இருக்கிறார்கள்.

நடந்து முடியும் உலகக் கோப்பை எண்ணற்ற சிறப்பான சம்பவங்களையும், பரபரப்பான நிகழ்வுகளையும் கொண்டுதான் அமையும். உலகக் கோப்பைக்கு முன்பு எண்ணற்ற கணிப்புகள் இருந்தாலும், அவையெல்லாம் உலகக் கோப்பையில் கொஞ்சம் மாறி வருவதுதான் விளையாட்டின் சிறப்பு.

இந்த வகையில் தென் ஆப்பிரிக்காவில் முன்னாள் கேப்டன் பாப் டு பிளிசிஸ் இடம், நடக்க இருக்கும் உலக கோப்பையில் எந்த நான்கு பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள்? என்பது குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இது விக்கெட்டை பொறுத்து அமையக்கூடிய ஒன்று. உங்களுக்கு தெரியும் ஆடுகளத்தில் ஏதாவது இருந்தால் சிராஜ் பந்தை இரண்டு பக்கமும் எடுத்து சிறப்பாக வீசக்கூடியவர். மேலும் அவர் எப்பொழுதும் ஆப் ஸ்டெம்பை குறிவைத்து தாக்குவார். ரபடா மற்றும் போல்ட் இதே வகையான ஆபத்தான பந்துவீச்சாளர்கள். தொடர்ந்து வெற்றிகரமாக இருந்து வருகிறார்கள்.

அதே ஆடுகளத்தில் கொஞ்சம் திருப்பம் இருந்தால் குல்தீப் கடந்த ஆறு மாதத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் ஒரு விக்கட்டை பெரும்பொழுது அடுத்து வந்து பேட்டிங் செய்யக்கூடிய பேட்ஸ்மேனுக்கு ஆரம்பத்தில் பந்தை விளையாடுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அவர் மிகவும் தந்திரமானவர் ஏனென்றால் பந்தை இருபுறமும் திருப்பக் கூடியவர்!” என்று கூறி இருக்கிறார்!

இன்று இந்திய அணி கேரள மாநிலம் திருவனந்தபுர மைதானத்தில் தனது இரண்டாவது மற்றும் கடைசி பயிற்சி போட்டியில் நெதர்லாந்து அணி உடன் மோத இருக்கிறது. திருவனந்தபுரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்றைய போட்டி நடக்குமா? என்பது சந்தேகமான ஒன்றாகவே இருக்கிறது!