கோலி ரோகித் கில் பாபர் யாரும் கிடையாது.. இவங்க ரெண்டு பேருதான் இந்த உலக கோப்பையோட ஹீரோ – தினேஷ் கார்த்திக் கணிப்பு!

0
9740
DK

அக்டோபர் ஐந்தாம் தேதி இந்தியாவில் துவங்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் நாளை முதல் தொடங்கி அக்டோபர் மூன்றாம் தேதி வரையில் நடைபெறுகிறது!

நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்குகிறது!

- Advertisement -

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கின்ற காரணத்தினால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தும் என்று உறுதியாக சொல்ல முடியாது.

இந்திய சூழ்நிலை பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் என ஆசிய நாடுகளுக்கு பெரிய அளவில் வித்தியாசமாக இருக்காது. மேலும் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், யாரையும் அச்சுறுத்தக்கூடிய அணியாக இருப்பார்கள்.

நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, கில், விராட் கோலி, பாபர் அசாம், டேவிட் வார்னர் ஆகியோர் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

பந்துவீச்சை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் இந்திய அணியின் குல்தீப் யாதவ், இங்கிலாந்தின் ஆதில் ரஷீத் இருவரும் முக்கிய வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இந்தத் தொடரில் மிகச் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் யாராக இருப்பார்கள் என்கின்ற கேள்வி டுவிட்டரில் தினேஷ் கார்த்திக் இடம் ரசிகர் ஒருவர் முன்வைத்தார். அதாவது மேன் ஆப் த டோர்னமெண்ட் யார் என்று கேள்வியை முன் வைத்தார்.

இந்தக் கேள்விக்கு தினேஷ் கார்த்திக் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, மேலும் ஆஸ்திரேலியாவின் சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் இருவரையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இவர்கள் இருவரும் எந்தப் போட்டியிலும் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வீரர்கள் என்பது பலமுறை நிரூபனம் ஆகி இருக்கிறது. நேற்று கூட இந்தியாவுக்கு எதிராக நான்கு விக்கெட் பந்துவீச்சு கைப்பற்றி மேக்ஸ்வெல் ஆட்டத்தை திருப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது!