“பாபர் தோனி கிடையாது.. பாகிஸ்தான் தோல்விக்கு முழு காரணம் அவர்தான்!” – விளக்கமாக விளாசி தள்ளிய அமீர்!

0
8187
Amir

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் ஒன்பது லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான அணி நான்கு ஆட்டங்களை மட்டுமே வென்று, ஐந்து ஆட்டங்களில் தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

பாகிஸ்தானின் ஐந்து தோல்விகளில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வந்த தோல்வி மிக முக்கியமான ஒன்று. அவர்களுக்குள் அரசியல் ரீதியான காரணங்கள் இருந்த போதிலும், பாகிஸ்தான் அணி சென்னையில் தேவையான ரன்களை எடுத்தும், ஆப்கானிஸ்தான் அணி சிறந்த முறையில் பேட்டிங் செய்து வென்றது.

- Advertisement -

மேலும் இது பாகிஸ்தானின் பந்துவீச்சின் பலவீனத்தையும் வெளியே காட்டியது. கூடவே பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் கேப்டன்சியின் பலவீனத்தையும் வெளியே காட்டியது. இந்தத் தோல்வி பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை மிகவும் பாதித்துவிட்டது.

இதன் காரணமாக பாகிஸ்தான அணி அரையிறுதிக்கு இருந்த ஒரு சதவீத வாய்ப்பையும் இங்கிலாந்து அணியிடம் டாஸ் தோற்று இழந்தது. எனவே பாகிஸ்தான் தன்னுடைய கடைசிப் போட்டியை விளையாடி ஜெயிப்பதற்கான உத்வேகத்தை, விளையாடும் முன்பாகவே இழந்துவிட்டது.

பாகிஸ்தானின் தோல்விக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு காரணம் கிடையாது, கேப்டன் பாபர் அசாம்தான் காரணம் என்று பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் முகமது அமீர் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “கேப்டன்சி முக்கியமானது. ஆனால் சிஸ்டம் என்பது என்ன? பாகிஸ்தான் கிரிக்கெட் நடத்துவதற்கு ஐந்து முதல் ஆறு நபர்கள் பொறுப்பேற்று இருக்கிறார்கள். அதில் கேப்டனும் ஒருவர்.

இதே சிஸ்டத்தை வைத்துக்கொண்டுதான் 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றோம். 1999 ஆம் ஆண்டு தோற்றாலும் கூட உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றோம். 2009 டி20 உலகக் கோப்பை மற்றும் 2017 சாம்பியன் டிராபிகளையும் இதே சிஸ்டத்தை வைத்துக்கொண்டுதான் வென்றோம்.

பாபர் கடந்த நான்கு ஆண்டுகளாக கேப்டனாக இருந்து தன்னுடைய அணுகுமுறையில் ஒரு அணியை உருவாக்கினார். ஜோஸ் பட்லர் நம்முடைய சிஸ்டத்தில் இல்லை? நம்முடைய சிஸ்டம்தான் பிரச்சனை என்றால் இங்கிலாந்து அணி ஏன் மோசமாக விளையாடியது?

2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு, மோர்கன் தனக்கென 25 வீரர்களை வாங்கினார். அவர்களின் அணுகுமுறையை மாற்றினார். உலகக் கோப்பையை வென்றார். இரண்டும் போதும் ஒரே இங்கிலாந்து கிரிக்கெட் சிஸ்டம்தான் இருந்தது. இதே போல் டெஸ்ட் கேப்டன்ஷியில் ஜோ ரூட் தடுமாறினார். பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக வந்து மாற்றினார். இதற்கும் ஒரே இங்கிலாந்து கிரிக்கெட் சிஸ்டம்தான் இருந்தது. இங்கு கேப்டன்கள்தான் எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள்.

மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட்டை மாற்றினார் என்று கூறுகிறோம். ஆனால் அவர் எந்த இடத்திலும் சிஸ்டத்தை மாற்றவில்லை. அவர் அதே சிஸ்டத்தில்தான் சிறந்த அணியை உருவாக்கினார். அவர் அஸ்வின் ஜடேஜாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பதாக மக்கள் கூறினார்கள். ஆனால் இன்று ஜடேஜா உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக இருக்கிறார். இதெல்லாம் கேப்டனாக அவர் செய்தார். பாகிஸ்தான் தோல்விக்கு பாபர்தான் காரணம். பாகிஸ்தான் கிரிக்கெட் சிஸ்டம் காரணம் கிடையாது!” என்று கடுமையாக கூறியிருக்கிறார்!