விராட் பாபர் கிடையாது.. இந்த 23 வயசு பையன்தான் யார் ஜெயிக்கனும்னு முடிவு பண்ணுவான்- ஆஸி லெஜன்ட் பரபரப்பான கணிப்பு!

0
722
Virat

உலகம் முழுவதும் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், சிலபல நாடுகள் சிலபல நாடுகளை எதிர்த்து மோதிக் கொண்டிருந்தாலும், இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு இருக்கும் எதிர்பார்ப்பும் வரவேற்போம் வேறு எந்த நாடுகள் விளையாடும் தொடருக்கும் போட்டிக்கும் கிடையாது.

இந்தியா பாகிஸ்தான் விளையாடிக் கொள்ளும் போட்டி வெறுமனே மக்களை மைதானத்திற்கு இழுத்து வந்து லாபம் சம்பாதித்து தருவது மட்டும் கிடையாது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டியைச் சுற்றி மக்கள் மிக உணர்வு பூர்வமாக பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுதான் இவர்கள் மோதிக் கொள்ளும் போட்டியை மிகவும் முக்கியத்துவம் ஆனதாக மாற்றுகிறது.

- Advertisement -

போட்டித் துவங்குவதற்கு நாட்கள் இருக்கும் பொழுது இரு அணி வீரர்களுமே மிகவும் தங்களை இயல்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனாலும் கூட தொடர்ச்சியாக வெளியில் இருந்து மக்கள் போட்டி குறித்து வெளிப்படுத்தும் உணர்வுகள், இறுதிக்கட்டத்தில் வீரர்களையும் தொற்றிக் கொள்கிறது. அதனால் இவர்கள் மோதிக் கொள்ளும் போட்டி மைதானத்தில் வேறு ஒரு வடிவத்தில் வெளிப்படுகிறது. இது இந்தியா பாகிஸ்தான் தாண்டி உலகம் முழுவதிலிருந்தும் ரசிகர்களை கொண்டு வருகிறது.

இந்த ஆண்டில் மட்டும் குறைந்தபட்சம் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேராக மூன்று முறை மோதிக் கொள்ளும் வாய்ப்பில் இருக்கிறது. அதிகபட்சம் ஐந்து முறை மோதிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் இவர்கள் இருவரும் இந்தியாவில் வைத்து உலகக் கோப்பையில் ஒருமுறை மோதிக் கொள்ள வாய்ப்பு கட்டாயம் இருப்பதால், உலகம் முழுவதிலும் இருந்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்க அளவில் அதிகரித்திருக்கிறது.

தற்போது இந்த இரு நாடுகளுக்கு இடையே ஆன போட்டி குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் வீரர் பிராட் ஹாக் “நிச்சயம் நான் இவர்கள் மோதிக் கொள்ளும் போட்டியை பார்த்துக் கொண்டிருப்பேன். பாருங்கள் எல்லா இடங்களிலும் விளையாட்டில் அரசியல் தலையீடு இருக்கிறது. இது ஆஸ்திரேலியா இங்கிலாந்து என எல்லா நாடுகளிலும் இருக்கிறது. ஆனால் இந்த இரு நாடுகள் தனிப்பட்ட முறையில் மோதிக் கொள்ளும் போட்டியை நாம் வெகு ஆண்டுகளாக காண முடியவில்லை.

- Advertisement -

இந்தியாவைப் பொறுத்தவரை ஆதிக்கம் செலுத்தக் கூடிய பேட்டிங்கை வைத்திருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு வேகப்பந்துவீச்சு யூனிட்டின் மூலம் சிறிய நன்மை இருக்கிறது. குறிப்பாக இடது கை வீரர் ஷாகின் அப்ரிடி. அவர் ஒரு தரமான பந்துவீச்சாளர். அவர் போல ஒரு பந்துவீச்சாளர் பந்தை வேகமாக வலது கை பேட்ஸ்மேன்களுக்கு உள்ளே ஸ்விங் செய்ய முடியும் என்றால், அது சிறப்பான ஒன்று. விளையாட கடினமான ஒன்று.

வலதுகை வீரர்களுக்கு எதிராக ஷாகின் சிறப்பாக செயல்படுவார். புதிய பந்தில் ஷாகின் விராட் கோலி சீக்கிரத்தில் வெளியேற்றினால், அது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். இந்திய அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஷாகின் மிகப்பெரிய போட்டியை தருவார். என்னைப் பொறுத்தவரை இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் வெற்றி தோல்வியை முடிவு செய்யக்கூடியது இதுதான்!” என்று கூறியிருக்கிறார்!