“உலக கிரிக்கெட்டில் அவரைப் போன்ற வீரர்கள் வெகு சிலரே இருக்கின்றனர்”! – இந்திய நட்சத்திரத்திற்கு இர்பான் பதான் பாராட்டு!

0
388

நியூசிலாந்து அணியானது தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டி தொடர்கள் மற்றும் மூன்று டி20 களை கொண்ட போட்டி தொடர்களில் ஆடி வருகிறது . சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது .

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டி தொடர் நாளை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற இருக்கிறது. கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்து அணியை வழிநடத்த இருக்கிறார்.

- Advertisement -

24 ஆம் தேதி நடந்து முடிந்த கடைசி ஒரு நாள் போட்டியில் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் 36 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார். மேலும் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார் . இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து பரோடா அணிக்காக ஆடியவருமான இர்ஃபான் பதான். ஹர்திக் பாண்டியாவை போல சிறந்த வீரர்கள் உலகில் ஒரு வெகு இருக்கின்றனர் என்று தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியுள்ள இர்பான் பதான்” “இந்திய அணியின் வெள்ளைத் பந்து கிரிக்கெட்டை பொருத்தவரை ஹர்திக் பாண்டியா ஒரு முக்கியமான வீரர். ஒரு நாள் மட்டும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அவரது பங்களிப்பு இந்தியா அணிக்கு மிக முக்கியமானது . அவரைப் போன்ற திறமை இருக்கின்ற ஒரு வீரரை தற்போது கண்டுபிடிப்பது அரிதான ஒன்று. சரியான நேரத்தில் அவர் நல்ல ஃபார்மிற்கு வந்திருப்பது மகிழ்ச்சி”என்று கூறி இருக்கிறார் .

மேலும் தொடர்ந்து பேசிய இர்ஃபான் பதான்” நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் அற்புதமாக இருந்தது . அதிலும் குறிப்பாக அவர் ஆடிய சில ஷாட்டுகள் மிகவும் அற்புதமானவை. குறிப்பாக ஒரு டென்னிஸ் வீரரை போன்று முன் கையை பயன்படுத்தி நேராக அவர் அடித்த ஒரு சிக்சர் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது”என்று பாராட்டினார்,

- Advertisement -

மேலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆட ஆரம்பித்து விட்டால் அவரை நிறுத்துவது கடினம். மற்ற பேட்ஸ்மேன்களுக்கு பழைய பந்திற்கு எதிராக ஸ்கோர் செய்வது கடினமாக இருந்தது, ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்கு அவ்வளவு சிரமம் இல்லை. அவர் விரைவாகவே ரன் குவித்தார். சரியான நேரத்தில் ஹர்திக் பாண்டியா பார்முக்கு திரும்பி இருப்பது இந்திய அணிக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று என்று கூறி முடித்தார் இர்பான் பதான் .