இந்தியாவுல இப்ப இந்த ரெண்டே பேர்தான் கம்ப்ளிட் பவுலர்.. மத்தவங்க ஒன்னும் கிடையாது – பாகிஸ்தான் சல்மான் பட் சர்ச்சையான பேச்சு!

0
1084
Salman

இந்தியாவில் நடைபெற இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான ஒரு மாடல் அணியாக இந்திய அணி ஆசியக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது!

ஆசியக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் மொத்தம் 17 வீரர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். சஞ்சு சாம்சன் இதில் 18வது வீரராக அதாவது பேக்கப் வீரராக அணியில் இடம் பெற்று இலங்கை செல்ல இருக்கிறார்.

- Advertisement -

அறிவிக்கப்பட்டுள்ள ஆசியக் கோப்பை இந்திய அணியில் காயத்தில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல்.ராகுல் இருவரும் மீண்டும் திரும்ப வந்திருக்கிறார்கள். கே.எல்.ராகுலுக்கு காயம் குணமடைந்து இருந்தாலும் ஒரு சிறிய நிக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் இதில் தெளிவு கிடைக்கவில்லை.

அதே சமயத்தில் காயத்தில் இருந்து மீண்டு வந்த வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அயர்லாந்து தொடரில் திரும்ப வந்தார். அவருக்கும் ஆசியக் கோப்பை இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது.

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா, சமி, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சர்துல் தாக்கூர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருக்கிறார்கள். சுழற் பந்துவீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா அக்சர் படேல் குல்தீப் யாதவ் மூவரும் இருக்கிறார்கள்.

- Advertisement -

தற்பொழுது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட் பற்றி பேசுகையில் “ஜஸ்ட்பிரித் பும்ரா மற்றும் முகமது சமியைத் தவிர, இந்தியாவில் முழுமையான பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை. மேட்ச் வின்னர் என்று யாரும் இல்லை. முகமது சிராஜ் மட்டும் தன்னுடைய பந்துவீச்சில் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறார். இந்த இரண்டு அல்லது மூன்று பேரை தவிர இந்தியாவில் வேறு யாருமே பயமுறுத்தும் மேட்ச் வின்னர்கள் கிடையாது.

எனவே அவர்கள் தங்களது பேட்டிங்கை அதிகமாகச் சார்ந்த இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். இங்கிலாந்து போல இந்தியாவும் ஒரு பெரிய டோட்டலை பேட்டிங்கில் கொடுக்க நினைக்கிறது. ஏனெனில் அவர்களிடம் தரமான பந்துவீச்சாளர்கள் இல்லை.

இந்தியா இதற்கு முன்பு அதிகப்படியான பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தார்கள். ஆனால் ஆசியக் கோப்பை அணி அறிவிக்கப்பட்ட பிறகு அவர்கள் வித்தியாசமான அணியாக தெரிகிறார்கள். இருந்த பிரச்சனைகள் மறைந்து விட்டதாக தெரிகிறது. இந்திய நிலைமைகளில் இந்த இந்திய அணி மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!