ஷமி மீண்டும் காயமா?.. பயிற்சியில் நடந்த முதல் திருப்பம் – கொல்கத்தாவில் வெளியான தகவல்

0
288
Shami

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டு வருகிறது. இதில் ஒரு வருடம் கழித்து இந்திய அணிக்கு திரும்பி இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் காயமடைந்துள்ளாரா? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

2023 ஆம் வருடம் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது காலில் இருந்த காயத்துடன் விளையாடியதால் காயம் பெரிதாக மாறியது. இதற்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமி அதிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு வருட காலத்திற்கு மேல் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அசத்திய 45 நிமிடங்கள்

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இதற்கான பயிற்சி முகாமில் அவர் கலந்து கொண்டு பந்து வீசி வருகிறார். தனது பயிற்சியை ஆரம்பித்த முகமது ஷமி ஆரம்பத்தில் சிறிய அடிகள் மட்டும் எடுத்து வைத்து ஓடி வந்து கவனமாக பந்துவீசி கொண்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து ஒரு மணி நேரம் கழித்து அடுத்த நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் முழு வேகத்தில் ஓடி வந்து பந்து வீசும் பயிற்சியை செய்தார். இதில் இந்திய இளம் வீரர்கள் திலக் வர்மா நிதீஷ் குமார் ஆகியோரை சிறப்பான பந்துவீச்சு மூலமாக தொந்தரவு செய்தார். இதைத் தொடர்ந்து துருவ் ஜுரல் அவருடைய பந்துவீச்சை நல்ல முறையில் அடித்து விளையாடினார்.

- Advertisement -

திடீரென ஏற்பட்ட பின்னடைவு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கண்காணிப்பில் பந்து வீசி வந்த முகமது ஷமி திடீரென மைதானத்திற்கு உள்ளே சென்றுவிட்டார். அவருக்கு மீண்டும் காலில் ஏதோ பிரச்சனை இருப்பது போல தோன்றியது. மேலும் கால் பகுதியில் பெரிய அளவில் ஸ்டிராப் கட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கில்லுக்கு துணை கேப்டன் பதவி தந்தது.. ஜெய்ஸ்வாலை ஆட விடாம பண்ணது – ஹர்பஜன் சிங் பேச்சு

அவரது பயிற்சி கவனித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இது கவலையை உருவாக்கியது. இந்த நிலையில் சிறிது நேரத்தில் முகமது ஷமி மீண்டும் திரும்பி வந்து நல்ல முறையில் பந்து வீச ஆரம்பித்தார். இதன் மூலம் அவருக்கு காயம் ஏதும் பெரிய அளவில் இல்லை என்பது தெரிந்தது. அதே சமயத்தில் காலில் அவர் கட்டியிருந்த கட்டின் மீது அதிக கவனத்தை அவர் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -