கில்லுக்கு துணை கேப்டன் பதவி தந்தது.. ஜெய்ஸ்வாலை ஆட விடாம பண்ணது – ஹர்பஜன் சிங் பேச்சு

0
58
Jaiswal

தற்போது சாம்பியன் டிராபி தொடருக்கான இந்திய அணிக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதால் ஜெய்ஸ்வால் பிளேயிங் லெவனில் இடம்பெற முடியாத சூழ்நிலையை உருவாக்கி இருப்பதாக ஹர்பஜன்சிங் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வெளியிட்டார். இதில் எதிர்பார்த்தபடியே ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற்றார். அதே சமயத்தில் சுப்மன் கில் துணை கேப்டனாகவும் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

ஏற்பட்டுள்ள பெரிய குழப்பம்

சுப்மன் கில் துணை கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கின்ற காரணத்தினால் அவர் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரோகித் சர்மா கேப்டனாக இருக்கின்ற காரணத்தினால் இன்னொரு துவக்க ஆட்டக்காரராக அவரும் விளையாடுவார் என்பது உறுதியானதாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஜெய்ஸ்வால் ப்ளேயிங் லெவனில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக காணப்படுகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவர் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவதோடு போட்டியில் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கில் இப்பொழுது துணை கேப்டன் என்பதால் ஜெய்ஸ்வால் துவக்க வீரராக வருவதில் பெரிய பின்னடைவு உண்டாகி இருக்கிறது.

- Advertisement -

கில்லுக்கு துணை கேப்டன் பதவி பிரச்சனை

இதுகுறித்து பேசி இருக்கும் ஹர்பஜன்சிங் கூறும் பொழுது “ஜெய்ஸ்வால் விளையாட தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியாவில் வைத்து சிறப்பாக விளையாடி காட்டிய காரணத்தினால் அவர் இந்திய ஒருநாள் அணியில் இருக்க வேண்டும் என எல்லோரும் விரும்பினார்கள். மேலும் அவர் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்றும் விரும்பினார்கள். ஆனால் தற்பொழுது சுப்மன் கில் துணை கேப்டனாக இருக்கின்ற காரணத்தினால் அவரே துவக்க ஆட்டக்காரராக விளையாடுவார். ஜெய்ஸ்வால் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது”

இதையும் படிங்க : என்ன சொன்னாலும் கில் துணை கேப்டனுக்கு தகுதியானவர்.. அதுக்கு காரணம் இதுதான் – அஸ்வின் கருத்து

“ஜெய்ஸ்வால் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கினால், கில் மூன்றாவது இடத்திலும், விராட் கோலி நான்காவது இடத்திலும் விளையாட வேண்டும். அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் இருக்காது. மொத்தமாக இந்த ரயல் தடம் புரள்வது போல மாறுகிறது. மேலும் ஜெய்ஸ்வால் துவக்க வீரராக விளையாட வேண்டியவர். கில் மட்டும் துணை கேப்டனாக அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் நிச்சயம் ஜெய்ஸ்வால் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -