“உலக கோப்பைக்கு 5 பசங்க இருக்காங்க.. ஆனா இந்த பையன் இடத்தை பிடிச்சுட்டான்!” – இந்திய முன்னாள் வீரர் கணிப்பு!

0
1425
Ict

2024 அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கு பெறுகின்றன. நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக இரண்டு சுற்றுகள் நடக்க இருக்கின்றன.

இந்த உலகக் கோப்பையில் பங்குபெறும் 20 அணிகளும் தேர்வாகிவிட்ட காரணத்தினால், அனைத்து அணிகளும் உலகக் கோப்பையை குறிவைத்து தங்களுடைய தயாரிப்புகளை ஆரம்பித்துவிட்டன.

- Advertisement -

இந்த வகையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் டி20 உலக கோப்பைக்கு தங்களுடைய தயாரிப்புகளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூலம் ஆரம்பித்து இருக்கிறது.

மேலும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக மூன்று சர்வதேச டி20 தொடர்கள் இருக்கலாம். ஆனால் அதைவிட முக்கியமாக ஐபிஎல் டி20 தொடர் இருக்கிறது. எனவே வீரர்களின் ஃபார்ம் ஐபிஎல் தொடரிலும் நன்றாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.

இந்த நிலையில் வீரர்களின் இடம் குறித்து பேசி உள்ள இந்திய முன்னாள் வீரர் ஆசிஸ் நெக்ரா கூறும்பொழுது “மீண்டும் உலகக் கோப்பை வந்துவிட்டது இதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் காரணமாக அடுத்த கேப்டன் யார் என்று நாம் விவாதிக்கும் பொழுது, வீரர்கள் யார் என்பது தொலைவாக இருக்கிறது.

- Advertisement -

ரிங்கு சிங் ஒரு கடுமையான போட்டியாளர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதை அவர் ஒரு முறை மீண்டும் நேற்று காட்டினார். ஆனால் உலகக் கோப்பை வெகு தொலைவில் இருக்கிறது. இதற்காக நெருக்கமான வீரர்களிடையே போட்டிகள் அமையும். விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோரை பற்றி பேசலாம்.

இங்கு தற்பொழுது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இல்லை. மேலும் சூரிய குமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருக்கிறார்கள். ஆனால் ஒரு அணிக்கு 15 வீரர்களைத்தான் தேர்வு செய்ய முடியும்.

ஆனாலும் கூட ரிங்கு சிங் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் நகர்த்தி இருக்கிறார். நீங்கள் அவரை தேர்வு செய்து தான் ஆகவேண்டும். நடுவில் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் மற்றும் ஐபிஎல் தொடரும் இருக்கிறது!” என்று கூறியுள்ளார்!