ஷாகின் அப்ரிடி மாதிரி டீம்க்கு 2 பேர் இருக்காங்க.. 99-2003 ஆஸி செஞ்சதை செய்யனும்- இந்திய முன்னாள் கேப்டன் அதிரடி ஸ்டேட்மென்ட்!

0
444
Shaheen

ஆசியக் கோப்பைத் தொடர் நேற்று பாகிஸ்தானில் துவங்கியிருக்கிறது. இன்று ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் தற்போது மோதி வருகின்றன!

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்ற இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி, இலங்கையில் நாளை மறுநாள் செப்டம்பர் இரண்டாம் தேதி கண்டி மைதானத்தில் நடக்கிறது.

- Advertisement -

சமீப காலத்தில் பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் நல்ல எழுச்சி கண்டு இருக்கிறது. வீரர்கள் ஒரு குழுவாக இணைந்து விளையாட ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்களது அணியில் யாருக்கு என்ன இடம்? என்ன கதாபாத்திரம்? என்பது தெளிவாக இருக்கிறது.

பாபர் அசாம் தொடர்ச்சியாக சீராக ரன்களை குவித்து வருவது பாகிஸ்தான் அணியை போட்டியில் முன்னணியில் வைப்பதற்கு உதவியாக இருக்கிறது. அவருடைய பேட்டிங் எழுச்சி பாகிஸ்தான் அணியின் ஒட்டுமொத்த எழுச்சியாகவும் மாறியிருக்கிறது.

அதே சமயத்தில் இன்னொரு பக்கத்தில் பார்த்தால் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சிறப்பானதாக மாறியிருக்கிறது. அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் மற்றும் நசீம் ஷா சிறப்பாக இருக்கிறார்கள். சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சதாப் கான் உச்சத்தில் இருக்கிறார்.

- Advertisement -

உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியது கிடையாது என்ற மோசமான வரலாற்றை 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மாற்றி அமைத்தது. இதற்கு மிக முக்கிய காரணமாக பேகப்பந்துவீச்சாளர் ஷாஹின் ஷா அப்ரிடி இருந்தார்.

தற்பொழுது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறும் பொழுது “ஷாகின் சிறந்த பந்துவீச்சாளர். ஆனால் அதற்காக அவரை விளையாட முடியாது என்று அர்த்தம் கிடையாது. சர்வதேச கிரிக்கெட்டில் இவரைப் போன்று ஒவ்வொரு அணிகளும் இரண்டு பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா அணியில் ஸ்டார்க் கம்மின்ஸ், ஹேஸில்வுட் கூட்டணி இருக்கிறது. நியூசிலாந்தில் சவுதி, போல்ட் இருக்கிறார்கள். ஆனால் இவர்களை எதிர்த்து விளையாடும் திறமை கொண்ட பேட்ஸ்மேன்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்.

2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நாங்கள் நல்ல ஒரு அணியாக இருந்தோம். எங்களிடம் சில அருமையான வீரர்கள் இருந்தார்கள். இதனால்தான் நான் உலக கோப்பைக்கு முன்பாக அணி வீரர்களை வெளியேற்றி வெளியேற்றி விளையாட வேண்டாம் என்று சொல்கிறேன். வீரர்களை எப்பொழுதும் ஒன்றாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஒன்றாக வைத்துக் கொள்ளும் வீரர்களைக் கொண்டு வெற்றியோ தோல்வியோ எது வேண்டுமானாலும் வரட்டும். 1999 மற்றும் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலியா அணியில் வீரர்களை வெளியே அனுப்பி மாற்றிக் கொண்டே இருக்கவில்லை. அவர்கள் ஒரே அணியாக தொடர்ந்து விளையாடினார்கள்!” என்று கூறியிருக்கிறார்!