அப்ப நான் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்து இருக்க வேண்டும் ; இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமல்ல உலக பேட்ஸ்மேன்களுக்கே இது பிரச்சனைதான் – நதிம் ஷா!

0
1949
Nadeem

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் டி20 கிரிக்கெட் வடிவத்தில் பாகிஸ்தான் அணிக்கு 20 வயதான இளம் வேகப்பந்துவீச்சாளர் நதிம் ஷா அறிமுகமானார்.

அவரது அறிமுகம் இந்தியாவுக்கு எனும் பொழுது அவரால் அதை மறக்கவே முடியாது. அவர் தனது முதல் ஓவரில் கே.எல்.ராகுலை வீழ்த்தினார். இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த விராட் கோலியை அவரது இரண்டாவது பந்திலேயே அவருக்கு வீழ்த்த வாய்ப்பு கிடைத்தது. அவுட் ஸ்விங்கராக வீசப்பட்ட பந்து எட்ஜ் எடுத்து ஸ்லீப்பில் நின்ற பகர் ஜமானிடம் சென்ற பொழுது அதைப் அவர் பிடிக்க தவறிவிட்டார். அந்தப் போட்டியில் இறுதியாக இரண்டு பந்துகள் மீதம் இருக்க ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள நதிம் ஷா ” எனது அறிமுகம் அதுவும் இந்தியாவுக்கு எதிரானது. அங்கு பெரிய சத்தமாக இருந்தது. பாபர் பாய் என்னிடம் சொல்வது எதையும் என்னால் காதுகளில் கேட்கவே முடியவில்லை. நான் முதலில் விராட் கோலிக்கு ஒரு இன் ஸ்விங்கரை வீசினேன். அடுத்து ஒரு அவுட் ஸ்விங்கரை வீசினேன். அது பேட்டின் வெளிப்புற விளிம்பில் பட்டு பஹர் ஜாமானிடம் ஸ்லீப்பில் கேட்ச்சுக்கு போனது. ஆனால் அதை அவர் பிடிக்காமல் தவறவிட்டார். ஆனால் அந்தக் கேட்ச் எடுக்கப்பட்டிருந்தால், என் அறிமுகமானது மறக்க முடியாததாக இருந்திருக்கும்!” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“எனது ஒரே நோக்கம் இந்தியாவுக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவது. எனக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. அங்கு விளையாடி பாகிஸ்தானுக்காக நான் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். மேலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்தியா பேட்ஸ்மேன்கள் தடுமாறுகிறார்கள் என்று சொல்கிறார்கள். பொதுவாக வலது கை பேட்ஸ்மேன்களுக்கு இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் பந்தை உள்நோக்கி ஸ்விங் செய்யக்கூடியவர்களாக இருந்தால், உலகத்தில் எல்லா பேட்ஸ்மேன்களும் தடுமாறத்தான் செய்வார்கள்!” என்று பேசி இருக்கிறார்!

உலகக் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு சொல்பவர்கள் பாகிஸ்தானை வேகப்பந்து வீச்சின் தொழிற்சாலை என்று சொல்லுவார்கள். அந்த அளவிற்கு காலம் காலமாக சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அங்கிருந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். தற்போதைய நவீன கிரிக்கெட்டிலும் அங்கு சராசரியாக 140 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -