“அவங்களுக்கு வேலையே கருத்து சொல்றதுதான்.. அதையெல்லாம் கேட்டுகிட்டு இருந்தா நாம சாதிக்க முடியுமா.?” – விமர்சகர்களுக்கு கிங் கோலி பதிலடி.!

0
216

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக விளங்கி வருபவர் இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. கிரிக்கெட் ரசிகர்களால் கிங்கு என்று செல்லமாக அழைக்கப்படும் விராட் கோலி இன்றைய மாடர்ன் கிரிக்கெட்டர்களில் தலைசிறந்த வீரராக விளங்கி வருகிறார்.

2008 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் தனது சர்வதேச கிரிக்கெட்வால்வை தொடங்கிய விராட் கோலி இரண்டு வருடங்களாக அணியில் நிரந்தரம் இடது கிடைக்காமல் போராடி வந்தார். 2009 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் ஒரு நாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

- Advertisement -

அதன் பிறகு இந்திய அணிக்கு தொடர்ச்சியாக தேர்வு செய்யப்பட்ட இவர் சச்சின் டெண்டுல்கர் யுவராஜ் சிங் போன்ற பேட்டிங் லெஜெண்டுகளை கொண்ட இந்திய பேட்டிங் வரிசையில் நீக்க முடியாத அங்கம் ஆகினார் . 2012 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் அல்லது அபாரமான டேட்டிங் மூலம் வெற்றியைத் தேடித் தந்தார் விராட் கோலி.

விராட் கோலியை சேஸ் மாஸ்டர் என கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சிகர்களும் அழைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அந்தப் போட்டிதான் என்றால் மிகையாகாது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 76 சதங்கள் எடுத்திருக்கும் விராட் கோலி சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக அதிக சதங்கள் எடுத்த வீரர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்..

மேலும் ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 13 ஆயிரம் ரகளை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பதற்கு விராட் கோலிக்கு இன்னும் 102 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த சாதனையை தற்போது நடந்து முடிந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்தப் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வழிக்கப்பட்டதால் ஆசிய கோப்பையில் தான் இந்த சாதனை நிகழ்த்தப்படும் என தெரிகிறது .

- Advertisement -

சமீப காலமாகவே விராட் கோலியின்பார்ம் பற்றிய கேள்விகள் முன்னால் வீரர்கள் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே ஏற்பட்டது. 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு விராட் கோலியின் பேட்டிங் ஃபார் மிக மோசமான .சரிவை சந்தித்தது. 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு 2022 ஆம் ஆண்டில் தான் சர்வதேச போட்டிகளில் சதம் எடுத்தார் விராட் கோலி. தற்போது மீண்டும் பார்முக்கு திரும்பி இருக்கும் அவர் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டியிலும் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விலாசினார் விராட் கோலி.

இந்நிலையில் தன்னை விமர்சித்து வரும் அனைத்து விமர்சிகர்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் தரமான பதிலடி கொடுத்திருக்கிறார் விராட் கோலி. இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் பேசியிருக்கும் அவர் ” மக்களுக்கு என்று தனியான கருத்துக்கள் மற்றும் ஒரு நபரை எடை போடும் பழக்கம் இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை என்னுடைய உள்ளுணர்வுகளுக்கு நம்பிக்கை வைத்து என்னுடைய திறமையின்மேல் தன்னம்பிக்கை வைத்து விளையாடி தான் இவ்வளவு சாதனைகளையும் கிரிக்கெட்டில் நிகழ்த்தி இருக்கிறேன். என் மீதான யாருடைய பார்வையோ அல்லது கருத்துகளோ மதிப்பீடு எனக்கு முக்கியமில்லை . நான் என்னுடைய உள்ளுணர்வுகளை நம்புகிறேன் . என்னுடைய திறமையின் மீது எனக்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறது என்று பதிலடி கொடுத்திருக்கிறார் விராட் கோலி.