பாகிஸ்தான் தொடர்கள்.. ஜிம்பாப்வே அணி அறிவிப்பு.. தைரிய முடிவு.. 2 கேப்டன்.. 3 புதிய வீரர்கள்

0
243
Zimbabwe

பாகிஸ்தான் அணி ஜிம்பாவே சென்று ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. தற்போது இதற்கான ஜிம்பாப்வே இரண்டு அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஜிம்பாப்வே அணி கடந்த முறைகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. குறிப்பாக 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே அணி வீழ்த்தி இருந்தது. எனவே அந்த அணியை பாகிஸ்தான் அணி சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது.

- Advertisement -

போட்டி அட்டவணை மற்றும் இரண்டு கேப்டன்கள்

பாகிஸ்தான் அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நவம்பர் 24ஆம் தேதி ஆரம்பிக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகள் நவம்பர் 26 மற்றும் நவம்பர் 28ம் தேதிகளில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து முதல் டி20 போட்டி டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகள் டிசம்பர் 3 மற்றும் டிசம்பர் 5ஆம் தேதிகளில் நடக்கிறது.

இதில் முதலில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு ஜிம்பாவே அணியின் கேப்டனாக கிரேக் எர்வின் நியமிக்கப்பட்டிருக்கிறார். மூன்று கோட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு அந்த அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

மூன்று புதிய வீரர்கள் தைரிய முடிவு

இந்த இரண்டு தொடர்களுக்கும் ஜிம்பாப்வே அணியில் மூன்று புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ட்ரெவர் குவாண்டு, தஷிங்கா முசெகிவா, டிடென்டோ மபோசாவை என்ற மூன்று புதிய வீரர்கள் அந்த அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

ஜிம்பாப்வே ஒருநாள் அணி: கிரேக் எர்வின் (கேப்டன்), ஃபராஸ் அக்ரம், பிரையன் பென்னட், ஜாய்லார்ட் கும்பி, ட்ரெவர் குவாண்டு, கிளைவ் மடாண்டே, டினோடீன் மபோசா, தடிவானாஷே மருமானி, பிராண்டன் மவுடா, தஷிங்கா முசெகிவா, பிளஸ்ஸிங் முசரபானி டியான் மியர்ஸ் மற்றும் ரிச்சர்ட் நகாராவா.

இதையும் படிங்க : பஞ்சாப் கிங்ஸ் பாண்டிங்கை நம்பாதீங்க.. டெல்லியில் இதைத்தான் செய்தார்.. கங்குலி எதிர்த்தார் – கைஃப் எச்சரிக்கை

ஜிம்பாப்வே டி201 அணி : சிக்கந்தர் ராசா (கேப்டன்), ஃபராஸ் அக்ரம், பிரையன் பென்னட், ரியான் பர்ல், ட்ரெவர் குவாண்டு, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, டினோடெனே மபோசா, தடிவானாஷே மருமானி, வெலிங்டன் மசகட்சா, பிராண்டன் மவுடா, தஷிங்கா முசேகிவா, பிளஸ்ஸிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் நகாராவா மற்றும் ரிச்சர்ட் நகாராவா.

- Advertisement -