பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வீரர்களை தக்க வைப்பதில் தவறு செய்து விட்டதாகவும், டெல்லி கேப்பிட்டல் அணியில் அவருக்கும் கங்குலிக்கும் இடையே நடைபெற்ற விவகாரங்கள் குறித்தும் முகமது கைஃப் விரிவாக பேசியிருக்கிறார்.
2018 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல் அணிக்கு பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் கொண்டுவரப்பட்டார். அடுத்த ஆண்டு அணியின் இயக்குனராக கங்குலி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக முகமது கைஃப் இருவரும் கொண்டுவரப்பட்டார்கள். இவர்கள் மூவரும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிகர் தவானை ரிக்கி பாண்டிங் விரும்பவில்லை
இதுகுறித்து பேசி இருக்கும் முகமது கைஃப் கூறும் பொழுது ” ஹைதராபாத் அணியில் இருந்து ஷிகர் தவானை ட்ரேடிங் செய்ய ரிக்கி பாண்டிங் விரும்பவில்லை. அவர் எப்பொழுது இந்திய டெஸ்ட் அணியில் இருந்தும் நீக்கி இருந்தார்கள். மேலும் ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர் இருந்தார். அவர் ஷிகர் தவானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக கூறியிருக்கலாம். இதனால் ரிக்கி பாண்டிங் டேவிட் வார்னரை அந்த இடத்திற்கு விரும்பினார்”
“இந்த இடத்தில் கங்குலி மிக உறுதியாக இருந்து ஷிகர் தவானை ஆதரித்தார். அவரும் டெல்லி அணியின் உரிமையாளரும் சேர்ந்து ஷிகர் தவானை டிரேடிங் மூலம் கொண்டு வந்தார்கள். இதற்காக ஷாபாஷ் நதிம் மற்றும் அபிஷேக் ஷர்மா இன்னும் ஒரு வீரர் என மூன்று வீரரை கொடுத்து வாங்கினோம். இதில் ரிக்கி பாண்டிங்க்கு விருப்பமில்லை. ஆனாலும் அந்த ஆண்டு நாங்கள் இறுதிப் போட்டிக்கு சென்றோம். ஷிகர் தவானை வாங்கியது சரி என அவர் நிரூபித்தார். ஆனால் அடுத்து தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் ஐபிஎல் தொடரை வெல்ல முடியாதது அவருக்கு வருத்தமாக இருந்திருக்கும்”
பஞ்சாப் கிங்சில் அதே தவறை செய்கிறார்
“ரிக்கி பாண்டிங் விளையாட்டு திட்டங்கள் மிகவும் தட்டையாக இருக்கிறது. ஆனால் அவருடைய பெயர் மிகப்பெரிய பெயராக இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர் இருக்கும் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். அதே சமயத்தில் திட்டரீதியாக பார்த்தால் பெரிதாக எதுவும் இல்லை”
இதையும் படிங்க : ஆஸி மீடியா மதிக்க இத மட்டும் செய்யுங்க.. 3 முறை அனுபவத்துல நான் கண்டுபிடிச்சது இதுதான் – ரவி சாஸ்திரி பேட்டி
“மும்பை இந்தியன்ஸ் கடந்த ஆண்டில் படுதோல்வி அடைந்திருந்தாலும் தங்கள் முக்கிய வீரர்களை அப்படியே தக்க வைத்தார்கள். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியில் பழைய பயிற்சியாளர்கள் செய்ததையே ரிக்கி பாண்டிங் செய்திருக்கிறார். அவர் அர்ஸ்தீப் சிங், ரபாடா மற்றும் லிவிங்ஸ்டன் மூவரையும் தக்க வைத்திருக்க வேண்டும். இவர்கள் மூவரும் குறைந்த விலைக்கு ஏலத்தில் கிடைப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.






