மிர்பூர் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்து பங்களாதேஷ் இளம் வீரர் அசத்தல்!

0
1693
BanvsAfg

ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து, ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடும் நட்சத்திர வீரர்கள் யாரும் பெரிதாக இடம்பெறவில்லை.

- Advertisement -

ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர் முகமதுல் ஹசன் ஜாய் நிதானமாக எதிர்கொண்டு 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஆனால் இன்னொரு முனையில் நின்று அதிரடி காட்டிய 24 வயதான நஜிபுல் ஹுசைன் சாந்தோ 175 பந்துகளில் 23 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 146 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 382 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் அணியின் நிஜாத் மசூத் ஐந்து விக்கட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பங்களாதேஷ் அணியின் இபாதத் ஹுசைன் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு ஃபாலோ ஆன் தராமல் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு இந்த முறையும் சதம் அடித்து நஜிபுல் ஹுசைன் சாந்தோ அசத்தினார்.

இவர் 151 பந்துகளில் 15 பவுண்டரிகள் உடன் 124 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கடுத்து நான்கு விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்து, தற்பொழுது 600 ரன்கள் தாண்டி முன்னிலை பெற்று இந்த டெஸ்ட் போட்டியில் மிகவும் வலுவாக பங்களாதேஷ் அணி இருக்கிறது.

சிறிய அணிகளுக்கு ஐசிசி சரியான முறையில் டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து வழங்கி வந்தால் அவர்களும் பிற அணிகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் வளர்வதற்கும் கிரிக்கெட் வளர்வதற்கும் உதவியாக இருக்கும்!